About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 23, 2012

முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் பதவிக் காலத்தில் 130 பேர் காணாமல் போயுள்ளனர்

கிழக்கு மாகண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மூன்று வருட பதவிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 130 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தழிழ்த் தேசிய கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் செயற்பாடு ஆரம்பித்த பின்பு காணமல் போன 130 பேரை பற்றி என்ன கூறப்போகிறார். அவரால் இவர்களை மீட்டுத்தர முடியுமா? அவரது ஆட்சிக் காலத்தில் இதனை ஆராய்வதற்காக ஏதாவது ஒரு குழுவை அவர் நியமித்தாரா? அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று கொடுத்த பணத்தில் தென் பகுதியில் கடுகதி வீதி அமைத்துவிட்டு, எங்கள் பகுதியில் கண்துடைப்புக்கு இரண்டு மூன்றுஹாப்பட் வீதி, ஓரிரு பாலங்கள் அமைத்துள்ளார்கள். அவைகளை கண்டு எமது மக்கள் ஒரு போதும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

ஒரு வருடத்தின் முன்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வெசாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில் “பௌத்த சிந்தனையைப் பின்பற்றி தமிழ் மக்கள் உண்மையான தமிழராக வாழ பழகிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார் இதை பௌத்தர்கள் இதுவரை கூறியதில்லை.

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்