" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 21, 2012
பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுங்கள் என மே 17 இயக்கம் சார்பாக திரு திருமுருகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்
சர்வதேச சமூகம் எமது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது உரிமைப்போரட்டத்தினை கூர்மைப்படுத்தவேண்டும், தமிழீழ பிரதேசத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 1948′ ஆண்டு தொடக்கம் 1983′ ஆடி 2009 வைகாசி மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்கு வருகின்ற ஆடி 22′ முதல் ஆவணி 12′ வரையிலான காலகட்டத்தில் லண்டன் மாநகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டி நடை பெரும் மைதானத்திருக்கு முன்பாக சிவன்தான் அவர்கள் தொடர இருக்கும் உண்ணா நிலை போராட்டங்களுக்கு பிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக்குளுவினரால் ஒழுங்கு படுத்தப்படுகின்ற கருப்பு ஆடி இன அழிப்பின் 29′ ஆம் ஆண்டு நினைவு கூரலும், தொடர் கவனஈர்ப்புப் போராட்டங்களுக்கும் பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுங்கள் என மே 17 இயக்கம் சார்பாக திரு திருமுருகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.