சிங்களப் பேரினவாதத்தால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பிலும், 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடரும் இனக்கருவறுப்புக்கும் கோரப் பலியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருமுகமாக 'கறுப்பு யூலை நினைவும் கவனயீர்ப்பும்' இன்று (21.07.2012) டென்மார்க்கின் Aarhus மற்றும் Odense ஆகிய நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், 'கறுப்பு யூலை' இனவழிப்பை விளக்கும் பெருமளவான துண்டுப்பிரசுரங்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கி கவனயீர்ப்பு செய்யப்பட்டது. அத்துடன், அடித்துப் படுகொலை செய்யப்பட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பாக ஏற்கெனவே டென்மார்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த அறிக்கைகளும் டென்மார்க் நாட்டு மக்களுக்கு பெருமளவில் வழங்கி, விளக்கப்பட்டது. மேலும், இன்றிலிருந்து கவனயீர்ப்பு நிகழ்வு தொடர்ந்து டென்மார்க்கில் மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்வில் டென்மார்க் தமிழர்கள் ஒன்றுகூடி, சிங்களப் பேரினவாதத்தால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு கோரப்பலியாகிய அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூர்ந்தனர்.



