About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 20, 2012

தமிழ் நாட்டில் ஈழ இனப்படுகொலை விழிப்புணர்வு ஊர்தி பயணம்!

தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து 07-07 -12 தொடங்கி தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர் இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் அவர்கள்.மேலும் பல இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ் திலீபன் நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர்.

செல்லுமிடம் எங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆங்காங்கே மனிதர்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் தமிழினப் படுகொலை பற்றிய படங்களை காட்டியும் துண்டறிக்கைகள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இரண்டாம் நாள் நாடு தழுவிய சுற்றுப் பயணம் விழுப்புரத்தில் இருந்து தொடங்கியது. இது வரை செங்கல்பட்டு அச்சரபாக்கம் மேல்மருவத்தூர் மதுராந்தகம் திண்டிவனம் விழுப்புரம் வரை தோழர்கள் வெகு சிறப்பாக தங்கள் பிரச்சாரத்தை செய்தனர். இனப் படுகொலை பற்றி தெரிந்தவர்கள் சிலர் தெரியாதவர்கள் பலர் அவர்களுக்கு இந்த தமிழ் இனப் படுகொலை பற்றிய படங்களும் செய்திகளையும் காட்டி தோழர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இன்னும் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்கள் ஈழத்தில் நடந்த இனப் படுகொலைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.இது போன்ற பல பேர்கள் ஈழப் பிரச்சினை மக்களிடம் எடுத்தச் செல்லவேண்டும். அப்போது தான் தனி ஈழம் ஏன் அவசியம் என்ற கருத்து மக்களிடம் போய் சேரும்.தொடர்ந்து இது போன்ற பரப்புரையில் ஈடுபடுவோம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலத்திற்கும் இந்த செய்தியை எடுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்கள்.

சிறப்புச் செய்திகள்

May 19, 2013

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,....
May 19, 2013

பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும்...
May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்