யாழ்.பருத்தித்துறை நீதிவான் சிறிநிதிநந்த சேகரனின் இல்லம் இனந்தெரியாத இனம் தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இவரின் வீட்டின் மீது நேற்று புதன்கிழமை இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ்.நெல்லியடியில் அமைந்துள்ள நீதிவானது வீடு பலமுறை கல்வீச்சுக்கு உட்பட்டதாக பருத்தித்துறை நீதிவான், நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெல்லியடியில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினரின் நிலசுவிகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்தசம்பவம் நடைபெற்றுள்ளதாக நீதிபதி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் ஆதரவாளர் ஒருவரின் வீடும் கல்வீச்சுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.