14.7.2012 சனிக்கிழமை யேர்மனியின் Kirchheim-Teck நகரில் தமிழாலையங்களுக்கிடையிலான மாவீரர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழாலயக் கொடியும் அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டுக்கள் யாவும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
யேர்மனியின் தென்மாநிலத்திலுள்ள பன்னிரெண்டு தமிழாலயங்கள் கலந்துகொண்ட இப் போட்டியில் முதலாவது இடத்தை München தமிழாலயமும் இரண்டாவது இடத்தை Stuttgart தமிழாலயமும் முன்றாவது இடத்தை Kirchheim-Teck தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.
வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் கொடுத்து உற்சாகப்படுத்தப்பட்டது. இவ்விளையாடடுப்போட்டிகளை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனிக் கிளையினரால் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.