சிரியாவின் பெய்ரூட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
அதிபர் பசார் அல்-அஸத்துக்கு எதிராக படையிலிருந்து பிரிந்து சென்ற வீரர்களும் அரசு எதிர்ப்பாளர்களும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அதிபருக்கு ஆதரவான படைகடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் முன்னாள் படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சருமான தாவூத் ரஜா (வயது 65) கொல்லப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் முகமது ஷார் உயிர் தப்பியுள்ளார்.
அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் கேபினட் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல அதிகாரிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 16 மாதங்களாக நடந்து வரும் மோதல்களின் உச்சகட்டமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவின் சிறுபான்மை சமூகத்தின் மூத்த அமைச்சரான ரஜா கொல்லப்பட்டதால் அவரது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அமைச்சர் கொல்லப்பட்டதையடுத்து சிரியாவில் மேலும் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.