About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jun 11, 2012

யேர்மனியில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக நடைபெற்ற மாணவர் எழுச்சி நாள் 2012

யேர்மனியில் Berlin   மற்றும் Hagen நகரங்களில்  தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது . நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் ,பொதுமக்கள் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர் .அத்தோடு Hagen நகரில் ஈழத்தமிழர்களின் சிறுவர்கள் அவல நிலை குறித்து யேர்மனிய மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் "அவர்களுக்கும் ஆசைகள் உண்டு" எனும் நிகழ்வும் நடைபெற்றது . அங்கே இவ் விடையம் சார்ந்த துண்டுப்பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டு இளையோர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வருகின்றனர். கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வருகின்றது நாம் அறிந்த விடையமே .அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர்.

தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும் அத்தோடு நினைவுகொள்ளப்படும்.

தகவல் :
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்