சிரியாவின் தென்பகுதியில் உள்ள டெரா நகரத்தில் பாதுகாப்புப் படைகள் நேற்றிரவு நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வெள்ளிக்கிழமையன்று நாட்டின் பிற பகுதிகளில் நடந்த மோதல்களில் வேறு நாற்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் ஆங்காங்கே புகை கிளம்புவதை பார்த்ததாகவும், அங்கே மின் நிலையம் ஒன்று தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுவதாகவும் அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
ஹமா பிராந்தியத்தில் உள்ள க்யுபெய்ர் கிராமத்தில் என்ன நடந்ததென்று கண்டறிய ஐநா கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் முயன்றுவருகிறார்கள்.
இந்த ஊரில் புதனன்று சுமார் 80 பேர் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.