About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jun 8, 2012

வருங்கால தொலைபேசி:

நவீன தொடுதிரை தொலைபேசி பயன்படுத்துவதில் உங்களுக்கு சிரமமா..?
உள்ளிருக்கும் விசைகளை அழுத்த முடியாமல் தொடுதிரையில் விரல்கள் சறுக்குகின்றனவா..?
இதற்கெல்லாம் தீர்வாக வருகிறது கலிபோர்னியா, தக்துஸ் நிறுவனத்தின் அரிய புதிய கண்டுபிடிப்பு.
 
கலிபோர்னியாவின் தக்துஸ் நிறுவனம், தொடுதிரை மீது பயன்பாட்டு தேவை ஏற்படுமாயின் தோன்றி பின் மறையக்கூடிய விசைகளையுடைய மெல்லிய அட்டை ஒன்றை உருவாக்கியுள்ளது.
தற்போதைய தொடுதிரை தொலைபேசிகளில் இருக்கும் விசைகளின் அளவுக்கேற்ப அவை அமையும் என அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
 
தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்பான இது, நவீன தொலைபேசி மட்டுமல்லாது 'டேப்லட்', தொலை இயக்கி போன்றவைகளுக்கும் பயன்படக்கூடும்.
 
மேலும், தக்துஸ் தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்பை தொடுதிரைகள் எதிர்நோக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கமுடைய 'உலகின் முதல்' கண்டுபிடிப்பென புகழாரம் சூட்டியுள்ளது.
தக்துஸ், தொடுதிரை உலகிற்கு ஒரு புது பரிமாணத்தை இதன்வழி அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
 
நவீன தொடுதிரை சாதனங்கள் குறிப்பாக தொலைபேசிகள் வெவ்வேறான மெல்லிய தட்டைகளைக்கொண்டே அமைக்கப்பட்டவை. புதிதாய் கண்டுபிடுக்கப்பட்ட 'தொட்டுணரக் கூடிய' தட்டை தற்போது பயன்பாட்டில் இருக்கும் கண்ணாடி அட்டைகளை போன்றே செயல்படக்கூடியவை என மேலும் கூறியுள்ளது தக்துஸ் நிறுவனம்.
 
தொடுதிரை உலகின் இப்புது பரிமாணத்தை ஆவலாய் நாமும் எதிர்பார்ப்போம்..
வெற்றிக்குமரன் தமிழரசி
 

சிறப்புச் செய்திகள்

May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...
May 23, 2013

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர்....
May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்