பிரான்சில் எதிர்வரும் யூன் மாதம் 10-17 திகதிகளில்பாராளமன்றதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தேர்தலில்பிரான்சு வாழ் தமிழீழ மக்களின்காத்திரமான பங்கு இருப்பதை புரிந்து கொண்ட நிலையில்பல்வேறு நகரங்களில் தமிழ்மக்கள் வாழும் பகுதிநகரபிதாக்கள்,பாராளமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுடனானசந்திப்புக்களைமேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரான்சின் புறநகர்பகுதிகளில் ஒன்றான அர்ஜந்தை நகரில் கடந்த ஜூன் 3ஆம் திகதிதமிழ்ச்சோலை மண்டபத்தில்நடைபெற்ற ஒன்றுகூடலில் அர்ஜந்தையின் முன்னாள் நகரபிதாவும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராகிய திரு ஜார்ஜ் மோர்தொரோன் (Mons George Morthron) மற்றும் திரு அலைன் டேனியல் மற்றும் திருமதி ரூசோ கலந்து கொண்டுசிறப்பித்திருந்தனர்.
.தமிழ்மக்கள் சார்பாக அர்ஜந்தைதமிழ்ச்சங்க தலைவர், அர்ஜந்தை நகரில் திரு மோர்த்ரோன் அவர்களின் தமிழ்மக்களுக்கான பிரதிநிதி,தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர்,தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர், தமிழ்ச்சங்கங்களின்கூட்டமைப்பு பொறுப்பாளர், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
திரு ஜார்ஜ் மோர்தொரோன் அவர்கள் தமிழர்கள் இந்த நாட்டில் சிறந்தஉழைப்பாளிகளாய், இந்த நாட்டு சட்டங்களை மதிப்பவர்களை இங்குவாழும் குழந்தைகளின்கல்வியில் முதன்மை வைப்பதையும் அதே நேரத்தில் தமிழர்கள் தமது , கலாச்சாரம், தாய்மொழியின்ஆகியவற்றின் முக்கியதுவத்தை உணர்ந்து வாழும் இனமாக தாம்பார்ப்பதாகவும் அந்த அடிப்படையில் தமிழர்களின் உணர்வுகளை தான்புரிந்து கொண்டதாக தனது உரையில் கூறினார்.
அதே வேளை எமதுதாயக மண்ணின் கடந்த காலஇன்றையநிலைப்பாடும் அதில் பிரான்சு நாட்டின்புதிய அரசியல் முன்னெடுப்பு,உதவி,எந்தவகையில் அமையவேண்டும் தமிழ் மக்களின்எதிர்பார்ப்புஎந்த வகையில் உள்ளது என்பதையும்தமிழீழ மக்கள்பேரவையின் தலைவர்திரு. திருச்சோதி அவர்கள் கூறியிருந்தார்.
அந்த அடிப்படையில் பிரான்சு நாட்டு பாராளுமன்றத்தில் பிரான்ஸ் -சிறி லங்கா நட்பு குழு இருப்பதையும் சிறி லங்கா தமிழர் உரிமையைமறுக்கும் இனமாக இருப்பதால், பிரான்சு பாராளுமன்றத்தில் பிரான்ஸ்- ஈழத் தமிழர்கள் குழு ஒன்றை கட்சி பாரபட்சம் இன்றிஉருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறித்தினார்.அவற்றைஉள்வாங்கிக் கொண்ட திரு மோர்தொரோன் அவர்கள்2009 ம்ஆண்டு எமது மக்கள்வீதிகளில் இறங்கிப்போராடியதையும், அந்த நேரம் அமைதியாக இருந்தசர்வதேசம் இன்று தமிழ்மக்களுக்கு விடுதலை முக்கியம் என்பதையும் தாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலையை தடுக்க பிரான்ஸ் ஈழத்தமிழர் நட்பு குழு ஒன்றை உருவாக்க செயல்படுவேன் என்று கூறினார். தமிழ்மக்களின் உணர்வுகளுக்குமதிப்பளித்து அந்த பிரதேசத்தில் அவர்கள்விரும்பும் செயல் திட்டங்களை முன்னெடுக்க உதவிடுவதாகவும் உறுதியளித்திருந்தார்.
வரும் இந்த தேர்தலும் அதனால் ஏற்படும் மாற்றங்களும் பிரான்சு வாழ்தமிழர்களுக்கும், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கும் பல நன்மைகளைபெற்று கொடுக்கும் என்பது இன்று உறுதிப்படுத்தப்படுகிறது, அதனால்நாம் இந்த தேர்தலில் எமது செயல்பாட்டை அதிகரித்து எமது வாக்குஉரிமைகளை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் என்பதைஎமது மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு