About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jun 6, 2012

பறவை-காய்ச்சலின் நாற்பது வகை மரபுக்கூறுகளை கண்டறியும் புதுவகை சோதனை.

பறவை-காய்ச்சல் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் வருகிறது. இந்நோய்க்கான பல மரபுக்கூறுகளை மிக துல்லிய முறையில் கண்டறியும் பரிசோதனைகள் ஆராய்ச்சியில் முதலிடம் வகிக்கிறது.
தற்போது பறவை-காய்ச்சலை கண்டறியும் மிக விரிவான சோதனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இச்சோதனை முறை, தற்போது சுழற்சியில் இருக்கும் H1N1 வைரஸ்களின் நாற்பது வகை மரபுக்கூறுகளை கண்டறியும் திறன் கொண்டுள்ளது. நடப்பில் இருக்கும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் சோதனை வெறும் பன்னிரண்டு வகை மரபுக்கூறுகளை மட்டுமே கண்டறிய கூடியது.

உலகளவில் H1N1 வைரஸ் சுமார் அறுபது சதவிகிதத்தினரை மரணத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. H1N1 நோயிக்கென தனி சிகிச்சைகள் உள்ளன. அதற்குரிய சிறந்த பலனை காணவேண்டுமெனில் சிகிச்சையை நோய் தொற்றிக்கொண்ட வெகு விரைவில் எடுத்தல் அவசியம். இவ்வாறு செய்வதே துல்லியமான சிகிச்சைக்கு இன்றியமையாததாக அமைகிறது என்கிறார் இப்புதிய கண்டுபிடிப்பில் ஒருவரான சிங்கப்பூர் தான் தோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த டிமோதி பேக்கம்.

சிங்கப்பூர், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் ஒன்றுக்காக; அதனை எதிர்கொள்வதற்காக முதலே தாயாராகும் நாடு. சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட இச்செயல்முறை ஏ.ஐ.தி பயோடெக் நிறுவனத்தினரின் கையிலுள்ளது. வெகு விரைவில் இதன் உரிமம் தென்-கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படுமென்றும் டிமோதி தெரிவெத்துள்ளார்.
தகவல்:
தமிழரசி வெற்றிக்குமரன்.



   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....
May 16, 2013

பிரான்சில் தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 16 வது நாளில் திரு. நடராசா அவர்கள்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்