
சீகிரியா மலைப் பகுதிக்குச் சென்ற மக்கள் சிலர் இன்று பிற்பகல் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குளவி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் சீகிரியா மற்றும் தம்புள்ளை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிரியா மலைப்பகுதிக்குச் செல்லும் மக்கள் தொடர்ச்சியாக குளவி தாக்குதலுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.