
மட்டக்களப்பு கொம்மாதுறை வாகன விபத்தில் செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவன் பலிகியுள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பிரதான வீதியில் மஞ்சள் கடவையை கடக்கமுற்பட்ட மாணவன் ஒருவர் மீது நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனம் மோதியதனால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றுள்ள இவ் விபத்தில் தெய்வநாயகம் சியாம்பவன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகனம் வேறுஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அப்பிரதேசப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் மாணவனின் தாயாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்மாதுறையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மாணவனின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.