About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

ராஜபக்சேவின் லண்டன் பயணம் தமிழர்களிம் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது

Jun 3, 2012
அடுத்த வாரம் நடக்கயிருக்கும் பிரிட்டன் அரசின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தனது பயணத்தை திட்டமிட்டிருப்பதும் அக்கொண்டாட்டத்தின்போது மேன்சன் ஹவுஸில் தனதுரையை பேசயிருப்பதும் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
தமிழர் இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமையன்று லண்டன் காமன்வெல்த் செயலகத்தின் முன் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
சீரான அரசியல் செயலற்றிருந்த சீனாவையும் ரஷ்யாவையும் சாடிவந்த பிரிட்டன், ராஜபக்சேவை பிரிட்டனில் நுழைய விடுவதும் அதிலும் அரசியாரின் ஆண்டுவிழாவிற்கு அழைப்பு விடுத்ததும் அதன் வஞ்சகத்தையே புலப்படுத்துகிறது என தமிழர் இணைப்புக் குழுவைச் சார்ந்த சசிதர் மகேஸ்வரன் அவ்வார்ப்பாட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காமன்வெல்த் செயலகத்திற்கு தமிழர் இணைப்புக் குழு விடுத்த அறிக்கை ஒன்றில், அரசியாரின் வைர விழா கொண்டாட்டத்திற்கு ராஜபக்சேவுக்கு தொடுத்த அழைப்பினை பிரிட்டன் அரசாங்கம் திருப்பப் பெற வேண்டுமென வலியுறித்தியுள்ளது.
மேலும், ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு ஒரு நன்முடிவு கிடைக்கும்வரை இலங்கையர்களை நாட்டினுள் விடக்கூடாதென்றும் கோரியுள்ளது.
இலங்கை இராணுவ படையினரின் போர் குற்றத்திற்காகவும் அதன் மனித உரிமை மீறலுக்காகவும் சர்வதேச விசாரணைகள் நடத்த மனித உரிமை குழுக்கள் மற்றும் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் அழைப்புவிடுத்தும் ராஜபக்சே அத்தகைய குற்றச்செயல்களை தொடர்ந்து எதிர்த்தே வருகிறார் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி அமைப்புகளுக்காக அமைக்கப்பட்ட காமன்வெல்த், பிரிட்டனின் சிறப்புமிக்க ஆண்டுவிழாவிற்கு இத்தகைய நபரை அழைத்திருப்பது மன வருத்தத்தையே அளிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இதற்கு முன்னிருந்த பல சிங்கள-பெளத்த தலைவர்கள் தண்டனைகள் அனுபவிக்காமல் தப்பி இருந்திருக்கலாம், ஆனால் இன்றைய ஊடகவியல் உலகில் யாரும் தப்பிவிட முடியாது.
ராஜபக்சேவின் குற்றங்கள் யாவும் அடுக்கடுக்காய் உலகிற்கு அம்பலமாகிவிட்டன.
இதுவே இனப்படுகொலைக்கெதிரான சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்த வாய்ப்பாக அமையும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பேசிய தமிழர் இணைப்புக குழுவை சார்ந்த திரு. ராஜமனோகரன், தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்சே பிரிட்டன் வந்து சேர்ந்தால் ஜூன், 6 2012 அன்று மேன்சன் ஹவுஸ் முன்புறத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்குமென கூறி நிகழ்வை முடித்துள்ளார்.
நன்றி. தமிழ் நெற்.
மொழிபெயற்பு,
வெற்றிக்குமரன் தமிழரசி

சிறப்புச் செய்திகள்

Jun 19, 2013

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள்....
Jun 19, 2013

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,......
Jun 19, 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா............

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்