திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உப்புவெளி பொலிஸ் பிரிவின் புதுக்குடியிருப்பு துவரங்காடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.