இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று 24.05.2012 அன்று அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இவ் உண்ணாவிரதம் வவுனியாவில் இடம்பெற்றது
அந்த அழைப்பை ஏற்று காணாமல் போனோர், தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்றவர்களின் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.






