About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 23, 2012

கர்பப்பை கழுத்து புற்றுநோய் (CERVICAL CANCER)!! -வெற்றிக்குமரன் தமிழரசி-

மனித உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள செல்கள் இயல்பாகவே வளர்ந்து பிரிந்து மேலும் உடலுக்கு தேவையான பல செல்களை உருவாக்குகின்றது. சில வேலைகளில், உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் தோண்றி உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள் இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேராமல் உடலிலேயே மிகைப்படுத்தப்பட்டு கட்டுப்பாடற்ற செல்கள் பிரிந்து பெருகுவதால் புற்றுநோய் ஏற்படுகின்றது. கட்டுப்பாடற்று கிடக்கும் இந்த செல்களானது, நாளடைவில் மற்ற தசைகளையும் தாக்குகின்றன்.
ஆண் பெண் இருபாலரையும் வயது வரம்பின்றி இந்நோய் தாக்கினாலும் தற்போதைய ஆய்வின்படி பெண்களே புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் முதன்மை நிலையை வகிக்கின்றது.
மார்பக புற்றுநோய் பற்றின விழிப்புநிலை பெண்களிடையே ஓரளவு காணப்பட்டாலும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் பற்றின விழிப்புநிலையும் அதனை தடுக்க கையாளும் முறைகளை பற்றின விளக்கங்களும் குறையவே காணப்படுகின்றது.
பெண்களின் இரண்டாம் உயிர்கொல்லி இந்த கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய். ஆண்டிற்க்கு சுமார் 500 000 பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இப்புற்றுநோய் கருப்பையின் மேற்பரப்பில் உள்ள உயிரனுக்களில் உண்டாகுகின்றன. இது Human Papilomavirus (HPV)  எனப்படும் ஒருவகை நுண்கிருமி கர்ப்பப்பை கழுத்து பகுதியில் தொற்றுவதால் ஏற்படுகின்றது. கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் என்பது பொதுவாக 20 வயதிலிருந்து 45-50 வயதுள்ள பெண்களுக்கு உருவாகிறது. சிறுவயதிலேயே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் வைரஸ் தாக்கத்தினால் இவர்கள் உந்தப்படுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தன் தீவிர நிலையை அடையும் வரை அதன் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. இதனை PAP SMEAR பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும். PAP SMEAR அல்லது PAP பரிசோதனை என்றழைக்கப்படும் இச்சோதனை கருப்பையின் கழுத்து (கருப்பவாயுள்) பகுதியில் மேற்கொள்ளப்படும்.
பெரும்பான்மையான பெண்கள் PAP SMEAR பரிசோதனை என்பது ஏற்கெனவே உண்டான கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயை கண்டறிய பயன்படுத்தப்படும் முறையென்றே கருதி, தனக்குத்தான் புற்றுநோயின் எந்தவித தாக்கமும் இல்லையே பிறகெதற்கு இந்த தேவையற்ற சோதனை என நினைத்து இப்பரிசோதனையை புறக்கனிக்கின்றனர்.
PAP SMEAR பரிசோதனையானது கருப்பவாயளில் வழக்கத்திற்கு மாறான HPV நுண்கிருமிகளின் தாக்கங்களோ அல்லது புற்றுநோயிக்கான தடயங்களோ உள்ளனவா என்பதனை முன்கூட்டியே கண்டறிய பயன் படுத்தப்படுகிறது.
எனவேதான், ஒவ்வொரு பெண்ணும் PAP SMEAR பரிசோதனை செய்துகொள்ள தூண்டப்படுகின்றனர். வெளித்தோற்றத்திற்கு தரும் முக்கியதுவத்தை கொஞ்சம் உடல் நலத்திற்கும் கொடுப்போம். வாழ்க்கையில் உறவுகளை பேணிக்காப்பதில் மகத்தான பங்களிப்பை கொன்டிருப்பவள் பெண். நோய் வந்த பின்னர் கலங்கி தவிப்பதை விட்டுவிட்டு வருமுன்னரே காப்போமே. நமது உடல் நலம் நமது பொறுப்பு.
   
 

சிறப்புச் செய்திகள்

May 19, 2013

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,....
May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்