About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 21, 2012

நோர்வேயில் சிறீலங்காவால் இன அழிப்பிற்கு உள்ளான தமிழ்மக்களின் நினைவேந்தல் நிகழ்வு

சிறீலங்காவால் இன அழிப்பிற்கு உள்ளான தமிழ்மக்களின் நினைவேந்தல் நிகழ்வு 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்தின் அருகாமையில் இருந்து பேரணியாக புறப்பட்டு நோர்வே பாராளுமன்ற முன்றலில் நினைவு வணக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இனஒழிப்பிற்கு உள்ளான மக்களுக்கு தங்களின் இதயத்தால் ஆத்மாத்தமாக வணங்கி மலர்வணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் தாய்த்தமிழகத்தில் இருந்து வருகைதந்த பொதுவுடமைக்கட்சியின் தமிழக மாநில செயலாளர் மதிப்புக்குரிய மகேந்திரன் அவர்களின் சிறப்புபேச்சும் அவர் எழுதிய ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது.

அத்தோடு நோர்வே நாட்டு பாரளுமன்றத்தின் துணைத்தலைவரும் ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சியின் பிரதிநிதியுமான மாரித் நிபாக் இடதுசாரிக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான துணைத்தலைவர் இங்கபோக் சொஸ் சிவப்புக்கட்சியின் தலைவரும் ஈழத்தமிழர் அவையின் உறுப்பினரும் ஆகிய பியோனார் ஆகியோர் கலந்து கொண்டு மே18 இனஒழிப்பு நாளுக்கான சிறப்புரைகளை வழங்கி இருந்தனர்.

இவற்றோடு ஈராக் சகோதரனின் வலிசுமந்த இசையும் தமிழ்மாணவர்களின் எழுச்சிமிகு இசையும் நினைவேந்தல் நிகழ்வுக்கு மகுடமாய் அமைந்தது.

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்