தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலாளா் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளா் மணிவண்ணன்(சட்டத்தரணி), உபதலைவா்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், ஜெ.ஜெயறூபன்(சட்டத்தரணி), தங்கராசா காண்டீபன், சத்தியசீலன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் ஈ.எ.ஆனந்தராஐா ஆகியோரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனா்.
நிகழ்வு மாலை 5.00 - 6.30 வரை இடம்பெற்றது.








