" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 13, 2012
மே 19 பிரித்தானிய ரவல்கர் சதுக்கத்தில் ஒன்று திரளுவோம் – மே 17 இயக்கம்.
சர்வதேச சமூகம் எமது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது உரிமைப்போரட்டத்தினை கூர்மைப்படுத்தவேண்டும்,
தமிழீழ பிரதேசத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 2009 மே மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்கு வருகின்ற மே 19 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு படுத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கல் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரலுக்கு பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுங்கள் என மே 17 இயக்கம் சார்பாக திரு திருமுருகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரவல்கர் சதுக்கத்தில் மே 19 சனிக்கிழமை மாலை 5:00 மணிதொடக்கம் 8:00 மணிவரை ஆரம்பமாகும் இவ் நினைவு குரலுக்கு ஒன்று கூடுவோம் என்னும் இவரின் முழு ஒலிவடிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.