About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 12, 2012

தொடரும் விடுதலைத் தாகம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976) - 36 வருடங்கள் - ச.ச.முத்து

இந்த மேமாதம் 05ம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தேவை முன் எப்போதையும் விட இப்போது மிகமிக அவசியமானதாக தமிழ் மக்களால் வேண்டி நிற்கப்படுகின்றது. ஈழத் தமிழ்தேசியத்திற்கு மட்டும் இல்லாமல் முழுத்தமிழினத்தினதும் எழுச்சியின் வடிவமாக இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் விளங்கிக்கொண்டிருக்கிறது.

அந்த இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று சிங்களப் பேரினவாதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு துடைத்து எறியப்பட்டுவிட்டது என்று வல்லாதிக்க சக்தியும் திரும்பதிரும்ப கூறிவந்து கொண்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது தேசிய அடையாளத்தின் ஒரு அங்கமாகவே கருதிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அந்த அமைப்பு 2009 மே மாதத்துக்கு பின்னர் மௌனமாகி போயுள்ள நிலையில், இன்றும் அந்த அமைப்பின் தேவைப்பாடும் அந்த அமைப்பின் மீதான ஆழமான நேசமும் ஒரு சிறிதளவும் குறையாமல் இருக்கின்றது என்றால் அதற்கான காரணம் எதுவாக இருக்க முடியும்.

காரணம் மிக எளிமையானது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கு எவை எவை காரணிகளாக விளங்கினவோ அதே காரணிகள் இன்றும் அதே அழுத்தங்களுடன் தொடர்வதே இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தேவைப்படுவதற்கான காரணம்.

எந்தப் சிங்கள பேரினவாத அடக்குமுறையில் இருந்தும் காட்டுமிராண்டித்தனமான இன ஒடுக்குமுறையில் இருந்தும் எமது மக்களை விடுவிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதோ இன்றும் அதே சிங்களப் பேரினவாதம் அதே அடக்குமுறையையும் ஒடுக்குமறையையும் அதே வடிவத்துடனே முன்னரைவிட மோசமாகவே தொடர்கிறதே. இது ஒன்று போதாதா, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தேவையை மக்கள் எதிர்பார்த்திருக்க.

மேலும், உலகில் உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் அதன் தோற்றத்திலிருந்தும் வளர்ச்சியிலிருந்துமே கணிக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பிறப்பு என்ற நிகழ்வை அது எப்படியான சூழலில் தோற்றம் பெற்றது என்பதிலிருந்தே கணிக்கவேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு அரசியல் போராட்டத்தின், ஒரு உரிமைப் போராட்டத்தின் அதிஉச்ச கட்டமாக அப்போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் தோற்றம்கொள்வது இயல்பானது.

எமது தமிழீழ விடுதலைப் போராட்டமும் பல படிநிலைகளையும் பரிணாமத்தையும் பெற்றே இறுதியில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தேசிய விடுதலை என்ற நிலையை அடைந்தது. மொழி உரிமை கோரி, சமஉரிமை கோரி, சமஸ்டி உரிமை கோரி அவை எதுவுமே சிங்களப் பேரினவாதத்தால் நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்ட வரலாற்று போக்கில்தான் வேறு வழியின்றி தேசிய விடுதலை என்றும் தமிழீழ தேசத்தின் விடுதலை என்றும் உருவானது.

இந்த கோரிக்கைகளின் வளர்ச்சியுடனேயே அதனை அடைவதற்கான போராட்ட வழிகளும் மாற்றம் பெற்றுக்கொண்டே வந்துகொண்டிருந்தது. அடக்குமுறையாளனின் சட்டங்களுக்கு உட்பட்டும், அவனுடைய சட்டங்களை மென்வழிகளில் மீறியும் சாத்வீக முறையிலான போராட்டவடிவங்கள் அனைத்தும் மிகவும் கொடூரமாக சிங்கள பேரினவாதத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு பொழுதில்தான் தமிழர்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவம் தோற்றம் கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் பற்றிய வரலாற்று ரீதியான காரணியை வெகு அற்புதமாக 1984 யூலையில் வெளியான விடுதலைப்புலிகள் பத்திரிகை (அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வமான பத்திரிகை) குறிப்பிடுகிறது பாருங்கள்.

ஆனால் இந்த அமைதிவழி மென்முறைப் போராட்டங்களை நசுக்க ஒடுக்குமறையாளன் ஆயுத வன்முறையை அதிதீவிரப்படுத்துகின்றான். இதனால் சட்டரீதியான, சமாதான, சன

நாயக போராட்டமுறைகளில் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். அதே சமயம் ஒடுக்கு

முறையோ இன்னும் தீவிரமாக தொடர்கிறது. சாதாரண வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் ஊடுருவிச் செல்கிறது.

அடக்குமறையின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க மக்களிடம் ஆவேசம் பிறக்கின்றது. விடுதலை வேட்கை எழுகின்றது. ஆயுத பலாத்கார அடக்குமுறையை ஆயுதம் தாங்கி எதிர்கொள்ள மக்கள் தயார் ஆவார்கள். இந்த புரட்சிகர வரலாற்றுச் சூழ்நிலையிலேயே ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் (Armed resistance movement) பிறக்கின்றது...’ என்று எழுதினார்கள்.

இந்தக் காரணங்களே தேசியத் தலைவரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை ஆரம்பிப்பதற்கு தூண்டிய காரணி ஆகும். இந்த விடுதலை அமைப்பானது தமிழர்களை அடக்கப்படும் மக்கள் என்ற நிலையில் இருந்து அடக்குமுறைக்கு எதிராக போராடும் மக்கள் என்ற நிலைக்கு மாற்றியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெறுமனே ஒரு ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் மட்டுமே என்ற நிலையில் இல்லாமல் அது தமிழர்களின் வாழ்வின் ஒரு பகுதியாகவும் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிய ஒரு அமைப்பாகவும் மாற்றம் கண்டது.

இந்த மாற்றம் ஒரிரு நாட்களில் அல்லது ஒரு முழு இரவுக்குள் அடைந்த மாற்றம் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னான ஒரு காலம் என்பதை தாமே வகுத்துக்கொண்டு அதற்குள்ளாக அரசியல் செய்ய புறப்பட்டவர்களும் அவர்களின் பின்னுக்கு நின்று இயக்கும் ஆதிக்க, மேலாதிக்க சக்திகளும் இன்றும் தமிழர்களின் உயிர்மூச்சாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பே தொடர்வது கண்டு பேரதிர்ச்சி அடைகிறார்கள்.

வெறும் மிகைஒலி விமான குண்டு வீச்சுகளாலும், கொத்தணிக் குண்டுகளாலும், இரசாயணக் குண்டுகளாலும் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை துடைத்தழிக்கலாம் என்று கனவுகண்ட கொள்கை வகுப்பாளர்கள் இன்றும் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அதே உயிர்ப்புடனும் அதே தெளிவுடனும் அதே தாகத்துடனும் தமிழ் மக்களால் உச்சரிக்கப்படுவது கண்டு தலைகுனிகிறார்கள் தோல்வியுடன்.

பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனே இன்னும் பல நு£ற்றாண்டுகளுக்கு தமிழர்களின் சிந்தனைகளையும் எண்ணத்தையும் வழிநடாத்தும் பெயராக இருக்கபோகின்றது என்ற உண்மை தெரிந்து பேரினவாதமும் அதன் கூட்டுச் சக்தியான மேலாதிக்கமும் அதிர்ந்துபோய் இருக்கிறது. இந்த சமன்பாட்டை வகுத்தறியவோ இதற்கான காரணங்களை புரியவோ முடியாத நிலையில் இருக்கிறார்கள். அடக்குமுறையாளனாகலோ, பேரினவாதிகளாலோ இந்த உறவை புரிந்து கொள்ள ஒருபோதும் முடியாது.

வன்னியில் பெரும் இன அழிப்பை நடாத்துவதற்காக சுற்றிவர முற்றுகையை சிங்களப் படைகள் இறுக்கி கொண்டே வந்துகொண்டிருந்த பொழுதில், ஒவ்வாரு அங்குலத்துக்குமான சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் ‘விடுதலைப் புலிகளுக்கு பின்னான ஒரு காலம் எப்படி இருக்கும்’ என்று கேட்டபோது அவர் எவ்வளவு உறுதியாக சொன்னார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னான காலம் என்பது ஒருபோதும் வராது’ என்று. இது எவ்வளவு உண்மையானது என்பதை காலம் இப்போது ஆளும் சிங்களத்துக்கு உணர்த்தி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு என்றும் தொடரும். அதன் கட்டமைப்புகள், அதன் நிர்வாக அலகுகள், அதன் கட்டுபாட்டில் இருந்த நிலம் என்பன பறிபோகலாம். அழிக்கப்படலாம்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது தமிழர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஒரு இரகசிய அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம், எவ்வாறு முழு மக்களினதும் உயிர்நாடியாக மாறியது என்பதையும் இந்த மாற்றத்துக்காக அந்த அமைப்பு செய்த தியாகங்களையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....
May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்