இம்மாதம் மே 18 Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் தமிழின அழிப்பு மாதத்தின் போர்க்குற்ற நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நான்காவது வருடமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் போர்க்குற்ற நாள் நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் போர்க்குற்ற நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முகமாக மாவீரர் தினம், போர்க்குற்ற நாள், கறுப்பு ஜுலை, மற்றும் தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நிகழ்வுகளை சீர்குலைக்க முயற்சி எடுத்து வரும் வேளையிலே அதற்கு இடம் கொடாமல் வழமை போல் கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்படும் போர்க்குற்ற நாளில் இம்முறை Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் ஒற்றுமையாய் ஒன்றுகூடுவோம்.
சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையில் போர்க்குற்றம் நடத்தப்பட்டமைக்கு அழுத்தம் கொடுக்கின்ற இவ்வேளையில் புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் தமிழின அழிப்பையும், போர்க்குற்றத்தையும் முன்நிறுத்தி எம் இனத்தின் விடிவிற்காக ஒவ்வொரு தமிழனும் ஒற்றுமையாக ஒன்றுகூடுவோம்.
மாவீரர் நாளும், மே 18 போர்க்குற்ற நாளும் இரண்டுபடுத்தப்படுவது, சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தேசியச் சிதைவு முயற்சியே. எனவே மண்ணுக்காக மரணித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் கனவின் பெயராலும், 2 இலட்சத்திற்கும் மேலாக கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் பெயராலும் திடசங்கற்பம் பூண்டு மே 18 போர்க்குற்ற நாளில் ஒன்றுபட்ட தமிழராய் உலகத்திடம் நீதி கேட்போம்.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இனையத்தளம்: www.ncctcanada.ca