யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலணி அலுவலகத்திற்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளார். இன்று மாலை மாவட்டச் செயலகத்திற்கு தொலைநகல் மூலம் இந்த இடமாற்ற உத்தரவை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யுத்தகாலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய இவர் 2009ஜனவரி மாதத்தில் கொழும்புக்கு சென்று தங்கியிருந்ததுடன் அதன் பின்னர் முல்லைத்தீவில் நெருக்கடி வேளையில் கடமையாற்றிய அதிகாரிகளை சிறிலங்கா படையினரிடம் மாட்டி வைத்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி ஹத்துருசிங்காவுடன் மிக நெருக்கமானவராக கருதப்படும் இமெல்டாவுக்கு இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இவருக்கு பாதுகாப்பு வழங்கும் படையினருக்கென ஐந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவருக்கு இத்தனை பெருந்தொகையான படையினர் பாதுகாப்பு வழங்குவது இமெல்டா சுகுமாருக்கு மட்டும்தான்.