About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 10, 2012

“இலங்கையின் கொலைக்களங்கள்” இரண்டு விருதுகள் வென்றது சனல் 4!

இலங்கையின் கொலைக் களம்’ எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தமைக்காக செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இரு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. ‘ஓர் உலக ஊடக விருது’ விழாவில் (ஒன் வேர்ல்ட் மீடியா அவார்ட்) ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த ஆவணப்படம் ஆகிய விருதுகள் செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவலகம் வலியுறுத்தக் காரணமாக இருந்ததை கருத்திற்கொண்டே இவ்விரு விருதுகளும் செனல் 4ற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோ, ‘தான் இதுவரையில் வெளிக்கொணர்ந்த செய்திகளில் மிகவும் முக்கியமானது இலங்கையின் கொலைக் களம்தான்’ என்று கூறியுள்ளார்.

இதேவேளை, சோமாலியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜமால் ஒஸ்மான், ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருதினைப் பெற்றுள்ளார்.

சோமாலிய ஓட்ட வீரரின் போராட்டம், சோமாலிய வரட்சி மற்றும் பஞ்சம் ஆகியவற்றை சிறப்பாக சித்தரித்தமை உட்பட இவரது செய்திகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது விழாவில், பீ.பீ.சீ. சர்வதேச சேவைக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஹெய்ட்டி கொலரா நோய்ப் பரவல் பற்றிய செய்தி தொகுப்பில் ஈடுபட்டதற்காக பீ.பீ.சீ.யின் உலக வானொலி சேவைக்கு சிறந்த வானொலிக்கான விருது கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பான முழு விபரங்கள் வருமாறு,

சிறந்த ஊடகவியலாளர் :- ஜமால் ஒஸ்மான் (செனல் 4)

சிறந்த ரேடியோ :- பீ.பீ.சீ உலகச் சேவை (ஹெய்டி கொலரா தொற்றுநோய் விவகாரம்)

சிறந்த தொலைக்காட்சி :- செனல் 4 (இலங்கையின் கொலைக் களம்)

சிறந்த பத்திரிகை :- ஒப்சர்வர் சஞ்சிகை (தி ரேப் ஒப் மென்)

சிறந்த புதிய ஊடகம் :- எஸ்.ஓ.எஸ் ஷில்ட்ரன் (எங்கள் ஆபிரிக்கா ‘அவர் அஃப்ரிகா’)

சிறந்த நாடகம் :- ஷிங்கா ப்ரொடக்ஷன்ஸ் (ஒதெல்லொ பர்னிங்)

சிறந்த கட்டுரை :- பீ.பீ.சீ டூ (தோக்ஸ் பிளேஸ் டு பீ அ பின்மேன்)

சிறந்த அபிவிருத்தி :- ஒன் தி லெவல் ப்ரொடக்ஷன்ஸ் (தெயார் வன்ஸ் வோஸ் அன் ஐலண்ட்)

சிறந்த செய்தி :- தி கார்டியன் மற்றும் ஐரிவி நியூஸ்

சிறந்த ஆவணப்படம் :- செனல் 4 (இலங்கையின் கொலைக் களம்)

சிறந்த மாணவர் :- ஸேனா மர்டன் (லண்டன் தொலைத்தொடர்புக் கல்லூரி)

சிறப்பு விருது :- ஜெம் டிவி

மாணவர் உரிமை விருது :- அல் ஜஸீரா (ஸ்பெல் ஒப் தி அல்பினோ)

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்