About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 10, 2012

வடமராட்சியில் ஒரே குடும்பத்தில் மூவரை வெட்டிய இளைஞர் கும்பல்!

வடமராட்சி கற்கோவளம் புனிதநகர் பகுதியில் திங்கட்கிழமை இரவு, மதுபோதையில் வந்த இளைஞர் குழுவொன்று நடத்திய வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

திங்கள் இரவு 7.30 மணியளவில் இந்தப் பகுதிக்கு மதுபோதையில் வந்த மூவர் குடும்பஸ்தர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கியுள்ளனர்.

தங்கள் வசமிருந்த வாளால் அவரை வெட்டிய அதேநேரம், அந்த காட்டு மிராண்டிகளிடமிருந்து அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியையும் மகளையும் அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.

மிருகத்தனமாக நடந்துகொண்ட அவர்களது வாள் வெட்டால் செல்லையா தங்கவேல் (வயது 40) அவரது மனைவி சசிகலா (வயது 36), அவரது மகள் நிஷாந்தி (வயது 18) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பெண்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாகவே அந்தப் பகுதியிலிருந்து தலைமறைவாகிவிட்டனர். இதுபற்றி பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே அவர்கள் அவ்விடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடமராட்சி பகுதியில் அண்மைக்காலமாக இவ்வாறான வாள் வெட்டுக்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் நிலவுகிறது.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....
May 19, 2013

மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு...
May 19, 2013

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்