About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 10, 2012

கல்லால் தாக்கப்பட்ட 6 வயது தமிழ் சிறுவன் பலி!

கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த 6 வயது தமிழ் சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளான். மொனராகலை – எல்ல பிரதேசத்தில் கிதவலவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இந்த சிறுவனைப் பெண் ஒருவரே கல்லால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சிறுவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு  எட்டு மணியளவில் உயிரிழந்துள்ளான்.

எல்ல, கிதலவத்தை தோட்ட 4ஆம் லயன் முகவரியைச் சேர்ந்த 6 வயதான சிவகுமார் மனோஜ் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த 04ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட பெண், பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மாணவனை குறித்த பெண் எதற்காக கல்லால் தாக்கினார் என்பது குறித்த தகவல்கள் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்