ஜூலை முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக ரவினதா ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக தமிழரான தமரா குணநாயகம் செயற்பட்டு வருகிறார். கடந்த ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டதை அடுத்து தமரா குணநாயகம் கியூபாவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் கசிந்தன.
தமரா குணநாயகம் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
எனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த தமரா குணநாயகம், வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது