About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 5, 2012

நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் ஏற்பாட்டில் “பயஸ் காலக்கிறுக்கல்கள்” நூல் வெளியீடு!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இலக்கிய வரலாற்றில் காட்டூன் ஓவியக் கலையில் பிரித்துப்பார்க்க முடியாத ஒருவராகி விளங்கி மறைந்த ஓவியர் பயஸ் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு “பயஸ் காலக்கிறுக்கல்கள்” நூல் வெளியீட்டு விழாவும் ஊடக சுதந்திரநிகழ்வும் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளன.

யாழ். திருமறைக்கலாமன்ற மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்விற்கான ஏற்பாட்டினை நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு மேற்கொண்டிருந்தது.

அமைப்பின் தலைவர் ஆர்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

‘பயஸ் காலக்கிறுக்கல்கள்’ நூலினை ஓவியர் பயஸ்ராஜாவின் துணைவியார் திருமதி காயத்திரி பயஸ்ராஜா, மகன் ஜதிவர்மன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். வெளியீட்டு உரையினை யாழ். தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளருமான ஆ.சபேஸ்வரனும் ஆற்றினர்.

சம காலப்போக்கினில் தமிழ் ஊடகங்கள் எனும் தலைப்பினில் வீரகேசரி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் எ.தேவராஜூம் நாலாவது தூண் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரனும், சமூக ஊடகங்கள் எனும் தலைப்பில் ஊடகத்துறை விரிவுரையாளர் அருட்திரு ம.றூபன் மரியாம்பிள்ளை அடிகளாரும் உரையாற்றினர்.

நிகழ்விற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஸ்பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், என்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்னார்.

இந்த நிகழ்வின் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப்பேருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்ட அதேவேளை ஓவியர் பயஸ்ராஜாவின் மகன் ஜதிவர்மனின் உயர்தரம் வரையான கல்விச் செயற்பாடுகளுக்கான நிதி உதவியினை தாம் பொறுப்பேற்பதாக நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் தலைவர் ஆர்.தயாபரன் வாக்குறுதி வழங்கினார்.

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்