About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 3, 2012

போர் முடிந்த போதும் அச்சுறுத்தல் நீங்கவில்லை- இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!

போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்கவில்லை என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு

‘போருக்கு பின்னரான காலகட்டத்திலும் ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட, காணாமல்போன, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

ஊடக நிறுவனங்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள பிணையில் விடுதலை செய்யப்படுவதும் விசாரணைகளை இழுத்தடிப்பதும் இலங்கையில் வழமையாகி வருகின்றது.

ஊடகவியலாளர்களுக்கான தொழில் பாதுகாப்புகள் உரிய முறையில் இல்லை. மிரட்டல், ஊடகவியலாளர்களை பின்தொடர்தல் போன்ற எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

ஆகவே ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசும் இலங்கை அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி, விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் அதற்கான உறுதிமொழிகளை வழங்கி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஊடக தொழிலை மேற்கொள்வதற்கான கருவிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்