About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 30, 2012

மீனவசொந்தங்களே!! இந்துமாகடலே எங்கள் சொந்தம்

தொப்புள்க்கொடி உறவென்று உறவுகொண்டாடும் தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் பிரிவினைவாதத்தை தூண்டிஈழத்தமிழனையும் தமிழகத்தையும் பிரித்துவிடவேண்டு என்ற சிங்களதேசத்தின் நீண்டநாள்ஆவலுக்கு ஒருபிரச்சனையாக இன்று வடக்குமீனவர்கள் தமிழக மீனவருக்கு எதிராக தூண்டிவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த ஈனவேலையை வெற்றிகரமாகச்செய்வதற்கு சிங்களஅடிவருடிகள் சிலரையும் அதற்கு பொறுப்பாக (ஈ பி டி பி)ஒட்டுக்குழுத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் சிங்களம் களமிறக்கியுள்ளது
தமிழர் தாயகமெங்கும் திட்டமிட்டு சிங்களமயமாக்கப்படுவதும் தமிழர்களின் வரலாற்றுச்சிறப்புமிக்க கோவிலகளுக்கும்அதை அண்மித்த பகுதிகளிலும் புதிது புதிதாகவும் அவரச அவசரமாகவும் பௌத்தவிகாரைகள் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதையும் தமிழர்களது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் கை கட்டிவேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் தேசத்துரோகிகள்  மீனவர்களின் உரிமைக்காக குரல்கொடுப்போம் தமிழகமீனவர்களுக்குஎதிராக போராட்டம் நடாத்துவோம் என்று கொக்கரித்துக்கொண்டிருப்பதற்கான காரணத்தை உறவுகள் தெளிவாக
புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழன் இதயங்கள் இன்னமும் துடித்துக்கொண்டிருக்க காரணம். தமிழக சொந்தங்களின்  அன்பும் ஆதரவும்அவர்களை பகைத்துக்கொள்வதும் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் எமது கைகளால் எமதுகண்களை காயப்படுத்தும் ஒரு செயலே ஆகும், இதனை மீனவசொந்தங்கள் புரிந்துகொள்ளவேண்டும் இந்துமாகடலேஎங்கள் பாட்டன் முப்பாட்டன் சொத்து இதிலே எல்லைகளை யார்போட்டார்? எனது உனது என்ற பிரிவினைவாதம்வேண்டாம் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் கடலிலே இருந்தபோது இல்லாத ஒரு பிரச்சனை இன்று தலைதூக்கிநிற்பதன்நோக்கம் என்ன?

தமிழகமீனவர்கள் அத்துமீறி உள்நுளைகின்றார்கள் என்று இன்று ஆத்திரப்படுகின்றவர்கள் கடலிலே எல்லைபோட்டுஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டும் கடலுக்குசெல்ல அனுமதிக்கப்பட்டபோது என்ன செய்தோம்?? எதிர்த்துபோராட்டங்கள் ஏதாவது செய்தோமா?? எங்கள் மண்ணில் எங்கள் கடலில் எவனோ ஒருவனிடம் அனுமதிபெற்றுஆட்டுமந்தைகளாக வரிசையில் நின்று வரையறுக்கப்பட்ட சிறு எல்லைக்குள் மட்டும் மீன்பிடித்தொழிலை செய்தபோதுஇந்த ஆத்திரமும் கோபமும் எங்கே போனது?

வடக்கின் மீன்வளம் நிறைந்த பகுதியான மாதகல் திருவடிநிலை உற்பட பல பிரதேசங்களில் இன்னும் அனுமதிபெற்றபின்னே தொழிலில் ஈடுபட முடியும், இதைவிட சங்கமித்தை உற்பட  இந்தியாவிலிருந்துவந்த பௌத்ததுறவிகள் இந்தப்பகுதிகளில்த்தான் வந்து இறகிங்கியதாகவும் என்வே இப்பகுதிகள் பௌத்தர்களில் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதனை எதிர்த்து வடக்கின் மீனவசங்கங்கள் என்ன செய்தன? என்ன செய்துவிட முடியும்.

இதேவேளை முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியிலே சுமார் 87 வரையான குடும்பங்கள் நிரந்தர பதிவுகள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான இதர வசதிகளுடன் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். அதை தடுத்து நிறுத்திவிட இந்த  மீனவசங்கங்கள் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன??இன்னும் எத்தனையோ அடக்குமுறைக்குள்ளே தொழிலில் ஈடுபட்டமீனவசொந்தங்கள் இன்று எமது சகோதரர்கழுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதை நிறூத்திகொள்ள வேண்டும்.

நாங்கள் செய்யவேண்டிய அவசியமான பணிகளை விடுத்து எமது கண்களை காயப்படுத்த நாங்கள் வேற்றொருவனைநடுவதா??எமக்குள் பிரச்சனைகள் இருக்கலாம் அதை நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் அதை விடுத்து எமது உறவுகளுக்குஎதிரான கருத்துக்களை வெளியிடுவதும் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் வரலாற்றில் எங்களை இழிவானவர்களாக பதிவுசெய்துவிடும்.

இப்படி ஒரு வரலற்றுத்தவறினை செய்து எமது அடுத்த சந்ததிகளை பிரிவினைவாதத்துக்குள் தள்ளிவிடக்கூடாதுஇன்று மீனவர்களுக்குள் இருக்கும் இந்த சிறிய பிரச்சனை நாளை தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் விரிசல்களைஏற்படுத்துஇவிடக்கூடாது எனவே இததை கருத்தில்க்கொண்டு  மீனவ சொந்தங்கள் விட்டுக்கொடுப்புடனும் எச்சரிக்கையுடனும் செய்ற்படவேண்டும்.

தமிழகத்தையும் தமிழீழத்தையும் பாக்குநீரினை பிரித்தாலும் கடலுக்கு அடியிலே நிலம் ஒட்டித்தான் இருக்கின்றது ஈழத்தமிழன் இரத்தம் சிந்தியபோது அக்கினியாகம் செய்த தியாகிகளை நினைவில் கொள்வோம் ஈழவிடுதலைக்காய் இன்றைக்கும் போரடியும் குரல்கொடுத்துக்கொண்டும் இந்திய வல்லாதிக்க சக்திகளை மீறி தங்கள் நேசக்கரங்களை ஈழத்தமிழனுக்கு நீட்டிக்கொண்டிருக்கும் தலைவர்களுக்கு மதிப்பளிப்போம்  இவர்கள் மனதை காயம் செய்யும்எந்த ஒரு செயலையும் ஈழத்தமிழர்கள் செய்துவிடக்கூடாது என்பதை கருத்துஇல்கொண்டு செயற்படுவோம்.

சிறப்புச் செய்திகள்

May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......
May 24, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என ....
May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்