Apr 30, 2012
வடக்கில் ஆழ ஊடுருவும் போதைவஸ்து விழிப்பின்றேல் அழிவு.
போரினால் தமிழ் இனத்தை அழித்த வரலாற்றில் ஆழ ஊடுருவும் படையின் பங்கைக் குறிப்பதாகும். இப்போது ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிக்கும் நோக்குடன் போதைவஸ்து என்ற ஆழ ஊடுருவும் படை எங்கள் வடபுலத் தில் நுழைந்து விட்டது. எங்கள் இனத்தில் இருக்கக்கூடிய- போதை வஸ்தின் அழிவைப் புரியாத-ஒரு சிறு தரகுப் பணத் திற்காக விலைபோகும் வஞ்சகர்கள் போதைவஸ்தின் நுழைவுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். போதைவஸ்து பாவனை வடக்கில் அதிக ரித்து விட்டால் எந்த வீடுமே நிம்மதியாக உறங்க முடியாது. எங்கும் வன்மங்கள் மலிந்து போகும். பாலியல் துன்புறுத்தல்கள், அடாவடித் தனங்கள் தலை விரித்தாடும்.
மண் மீட்புக்காகப் போரிட்ட ஒரு இனம் போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் போதைப் பாவனையால் சின்னாபின்னப் பட்டு சீரழிந்து போன தென்ற வரலாறே மிஞ்சிக் கொள்ளும். அதிலும் வடக்கில் ஆழ ஊடுருவியுள்ள போதைப் பொருள் பாவனையில் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலால் கிறுதி வருகிறது. மாண வச் செல்வங்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையா? இதனை அடியோடு அழிக்க மக்கள் தயாராவது காலத்தின் கட்டாய தேவை.
அதேநேரம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு நீதி பரிபாலனம் கடும் நட வடிக்கை எடுத்தாக வேண் டும். இக் குற்றவாளிகள் தொடர்பில் சட்டத் தரணி கள் நிதானமாகச் செயற்படுவது அவர்களின் தார்மீகப் பொறுப்பு. அன்புக்குரிய தமிழ் இளைஞர்களே! நீங்கள் நினைத்தால், ஒரு இரவுப் பொழு தோடு போதைப் பொருளை எங்கள் மண் ணில் இருந்து அடியோடு அழிக்கவும் அதன் விற் பனையாளர்களை முடக்கவும் முடியும். தயாராகுங்கள்.