About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 29, 2012

யாழில் புற்றுநோய் தாக்கம் அதிகரிக்க நிலத்தடி நீர் பாவனையும் காரணம் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்கர் ஜெயக்குமார்

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக புற்றுநோயாளர்களின் வீதம் அதிகரித்து வருகிறது. இதற்கு தரைக்கீழ் நீரைப் பயன்படுத்தும் ஒரு காரணமாகும்.

இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ந. ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் எமது பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களில் கூடுதலானவர்களுக்கு சிறு நீரகங்களில் கல் மற்றும் புற்றுநோய் என்பன ஏற்படுவதற்கான காரணம் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்களில் அதிகமான புற்றுநோயாளர்கள் நிலக் கீழ் நீரைப் பருகுவதால் அந்நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகமாகக் காணப்படுவதே அவர்களின் நோய்க்கான காரணமாகும்.
குடாநாட்டு மக்கள் இத்தகைய நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மழைநீரைச் சேமித்து வைத்து பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் கிளிநொச்சியில் இருந்து இரணைமடுக்குளத்து நீரைக் குடாநாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தின் மூலமும் ஓரளவுக்கு எமது மக்கள் நிவாரணம் பெற முடியும் எனத் தெரிவித்தார்.

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....
May 16, 2013

பிரான்சில் தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 16 வது நாளில் திரு. நடராசா அவர்கள்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்