தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சி பூர்வமாக டென்மார்க்கில் Grindsted நகரில் நேற்று 21.04.2012 நடைபெற்றது மாலை 16.30 மணியளவில்ஆரம்பித்தநிகழ்வில் தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் தம்பிராசா,மதியழகன் கார்த்திகேசு, விமகேஸ்வரன் கனேசாஇயா,செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் இவர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் இசை நிகழ்ச்சி, கவிதை, நடனங்கள், நாடகம்,பேச்சுகள் இடம் பெற்றதுடன் தியாகத்தாய் அன்னை பூபதியின் விவரணப்படமும் காண்பிக்கப்பட்டது. இறுதி நிகழ்வாக நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும் என்னும் பாடலுடன் உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றது.