About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 21, 2012

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனை

எதிர் வரும் மே மாதம் 5 ஆம் நாள்  சனிக்கிழமை பி.ப 5:30 மணியிலிருந்து 10 மணிவரை மிஸ்ஸிஸ்ஸாகாவில் (Mississauga – Burnhamthorpe & Dixie) அமைந்துள்ள கிளன் போறஸ்ற் பாடசாலை (Glenforest Secondary School, 3575 Fieldgate Drive, Mississauga) மண்டபத்தில் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.

தாயகத்தில் இருந்து கோரப்பட்டுள்ள உடனடித் தேவைகளிற் சில:

• கடந்த கால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு
- இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்
- கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்
- நெஞ்சுக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்

• பராமரிப்பு நிலையத்திற்கான பராமரிப்புச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன. கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களை பராமரிப்பதற்கு முழுநேரப் பராமரிப்பாளர்களை ஏற்பாடுசெய்து             அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியுள்ளது.


• மீளக் குடியமர்த்தப்பட்ட இடங்களில் பெற்றோர்களை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கான உதவியும் கோரப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் உடனடியாக கோரப்பட்டுள்ள உதவிகளாகும்.

எமது உறவுகளின் உடனடித் தேவைகளைப் நிவர்த்திசெய்யும் முகமாக மண்வாசைன எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு எம் தாயக உறவுகளின் துயர்துடைக்க உதவுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இனையத்தளம்: www.ncctcanada.ca

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்