About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 14, 2012

டிராவிட்டின் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கம்பீர் அணி.

ஐ.பி.எல் லீக் போட்டியில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டிராவிட்டின் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 15வது லீக் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ராஜஸ்தான் அணியில் காயம் அடைந்த கெவான் கூப்பருக்கு பதிலாக பிராட் ஹாட்ஜ் வாய்ப்பு பெற்றார். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் கொல்கத்தா அணியில் பிரட் லீ நீக்கப்பட்டு சுனில் நரைன் இடம் பெற்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் தலைவர் டிராவிட் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு டிராவிட், ரகானே சேர்ந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். சுனில் நரைன் சுழலில் ரகானே வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார்.

இந்த நேரத்தில் திடீரென விக்கெட்டுகள் சரிந்தன. முதல் விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், சாகிப் அல் ஹசன் பந்தில் ரகானே(19) வெளியேறினார்.

யூசுப் பதான் நேரடி த்ரோவில் மனேரியா(1) ஆட்டமிழந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சாகிப் சுழலில் டிராவிட்டும்(28) ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 49 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.

பின் கோஸ்வாமி, ஓவேஸ் ஷா இணைந்து பொறுப்பாக ஆடினர். இவர்கள் யூசுப் பதான் ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தனர். தொடர்ந்து ரஜத் பாட்யா ஓவரில் கோஸ்வாமி ஒரு சிக்சர், ஷா ஒரு பவுண்டரி அடிக்க ஸ்கோர் சீராக உயர்ந்தது.

மீண்டும் பந்துவீச வந்த சாகிப் இம்முறை கோஸ்வாமியை(24) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். நரைன் பந்தில் ஷா(31) வீழ்ந்தார்.

பாலாஜி வீசிய கடைசி ஓவரில் போத்தா ஒரு பவுண்டரி, ஹாட்ஜ் ஒரு சிக்சர் அடித்தனர். ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. ஹாட்ஜ் 12 ஓட்டங்களுடனும், போத்தா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா சார்பில் சாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்தில் ஏமாற்றம். டிராவிட் த்ரோவில் அணித்தலைவர் கம்பீர்(11) ஆட்டமிழந்தார். பின் காலிஸ், பிஸ்லா இணைந்து அசத்தினர்.

ராஜஸ்தான் பந்துவீச்சை மிக எளிதாக சமாளித்த இவர்கள், விரைவாக ஓட்டங்களை சேர்த்தனர். போத்தா சுழலில் காலிஸ்(31) சிக்கினார். அடுத்து வந்த மனோஜ் திவாரி, சவான் பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார். மனேரியா பந்தில் பிஸ்லா(29) வெளியேறினார். திவாரி 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சாகிப் அல் ஹசன், அமித் சிங் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் 16 ஓட்டங்களுக்கு வெளியேறினார். இதே ஓவரில் யூசுப் பதான் ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார்.

பின் சவான் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த டஸ்காட்டே, வெற்றியை உறுதி செய்தார். கொல்கத்தா அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் முந்தைய போட்டியில் ராஜஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு பழிதீர்த்தது. யூசுப் பதான்(7), டஸ்காட்டே(7) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்