சோமாலியாவில் பெண் ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அந்நாட்டு பிரதமர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் பிரபலங்கள் பலர் பலியாகி உள்ளனர்.
சோமாலியாவின் தலைநகர் மொகாதிசு நகரில் அந்நாட்டின் சாட்டிலைட் டி.வி நெட்வொர்க்கின்(Satellite TV Network) முதலாமாண்டு விழா நடந்தது.
இதில் அந்நாட்டு பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் பிரதமர் அபித்வெலி முகமது அலி காயமின்றி உயிர்தப்பினார்.
எனினும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஏடன் யாப்ரோவில்லிஸ் மற்றும் சோமாலியா கால்பந்து சங்கத்தின் தலைவர் முகமது நெளர் ஆகியோர் பலியாயினர்.
பலர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு சோமாலியாவின் உள்நாட்டுப்போரினை நடத்தி வரும் அல்ஷெபா என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


