இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விரைவில் அறுவைசிகிச்சை நடைபெற உள்ளதால் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அப்போதே அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பூரண சிகிச்சைக்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், சச்சின் விரைவில் லண்டன் செல்ல உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.
சத நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால், விரைவில் தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.