About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Mar 28, 2012

ஓர் மொழித்தேடல்! - 'Ĉu vi scias pri esperanto?'

செம்மொழியாக ஒரு  மொழியை தெரிவு செய்ய அதன் இலக்கிய படைப்புக்கள் வளம் மிகுந்ததாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் என்பது மொழிவல்லுனர்கள் கோட்பாடு. உலகில் இன்று பேசப்படும் 6,900 மொழிகளில் 8 மொழிகளே உலகின் பண்டைய கால செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழும்  ஒன்று என்பது பெருமைக்குரியது தான். இக் கட்டுரை தமிழ் மொழியில் அதிகம் அலசப்பட்டிராத ஓர் புதிய மொழியை பற்றி விவரிக்கிறது.

Esperanto (எஸ்பெராண்டோ); இன்று உலகில் அதிகம் பேசப்படும் 'உருவாக்கப்பட்ட மொழி' என்ற பெருமையை, தோற்றம் பெற்ற நூறாண்டுகளுக்குள் பெற்றுக்கொண்ட மொழி. உலகின் அனைத்து இன மக்களாலும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில், தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு பொதுவான மொழியொன்றை உருவாக்கினால், எனும் யோசனையில், எல்.எல்.சாமன்ஹோஃப் என்பவரால், 1877ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அதே ஆண்டில் அவர் எழுதிய 'உனுவா லிப்ரோ' எனும் நூலில் எஸ்பெராண்டோ மொழி பற்றிய தகவல்களை முதன்முறையாக உலகுக்கு வெளியிட்டார். கற்றலுக்கு எளிதாகவும்,நாடுகளுக்கு இடையே மொழித்தடைகளை போக்கி உலக பொது மொழியாக எஸ்பராண்டோ இருக்கும் என அப்போது அவர் ஊகம் வெளியிட்டார்.

அவரது கணிப்பு வெற்றி பெற்றதா?

இல்லை. எனினும் முன்னேற்றகரமாக தனது பயணத்தை தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகில் இன்று சுமார் 10,000 பேர் இம்மொழியை சரளமாக பேசுவதுடன், 100,000 பேர் தமது அன்றாட வாழ்நாளில் பயன்படுத்துகிறார்கள். 1 மில்லியன் பேரால் இம்மொழியை புரிந்து  கொள்ள முடிகிறது. 10 மில்லியன் பேர் இம்மொழியை கற்க ஆர்வமாக உள்ளார்கள்.



2000 ற்கு மேற்பட்ட மக்கள் Esperanto ஐ தாய்மொழியாக கொண்டுள்ளனர். அவர்களது அடுத்தடுத்த தலைமுறையினரும் எஸ்பரெண்டோ மொழி பேசுபவர்களாக உள்ளார்கள். கடந்த 2011 நவம்பர் மாதம், எஸ்பெராண்டோ வலைப்பதிவொன்று இரண்டாம் தலைமுறை எஸ்பெரொண்டோ இளைஞர் ஒருவரை செவ்வி கண்டது.


நீங்கள் இரண்டாம் தலைமுறை எஸ்பெரண்டோ மொழிக்காரரா?

ஆம், எனது தாயாரின் பெற்றோர் எஸ்பெராண்டோ மொழி மூலம் தான் அறிமுகமாகி கொண்டார்கள். அவர்கள் தமக்குள் இம்மொழியை சரளமாக பேசத்தொடங்கிய போது எனது தாயார் பிறந்தார். நான் பிறந்த போதும், எனது பெற்றோர்  எஸ்பெராண்டோ மொழியிலேயே என்னுடன் உரையாட தொடங்கிவிட்டனர்.

பாடசாலையில் சவாலாக இருந்தது. மற்றைய மொழிகளை விட எஸ்பெரண்டோவை இலகுவாக கற்றுவிடலாம். ஆனால் இம்மொழி பேசத்தெரிந்தவர் அருகில் இருந்தால் மட்டுமே எம்மால் உரையாட முடியும் என்கிறார் அந்த இளைஞர்.

இம்மொழியின் உருவாக்கத்திற்கான பிண்ணனி :

இம்மொழியை உருவாக்கிய சாமென்ஹாஃப் ஒரு யூத கண் வைத்தியர். அவருடைய புனைப்பெயர் Doktoro Esperanto (Doctor Esperanto). எஸ்பெராண்டோ மொழியை உருவாக்கிய போது அவர் அதை La Internacia Lingvo (The International Language) என அழைத்தார். எனினும் அம்மொழி பிரபலமடைந்த போது Esperanto ஆக மாற்றம் பெற்றது. Esparanto என்பதன் அர்த்தம் 'ஒன்று என்பதே எதிர்பார்ப்பு'.

பைல்ஸ்டோக் எனும் போலந்து நகரில் பிறந்து வளர்ந்த சாமென்ஹோஃப், போல்ஸ், ரஸ்சியன், யூத மொழி, லிதுவானியென்ஸ், ஜேர்மனிய மொழி பேசும் மக்கள் இடையே வாழ்ந்தார்.

இம்மக்களிடையே புரிந்துணர்வு, அவநம்பிக்கை ஏற்படுவதற்கு காரணம் இவர்களுடைய மொழிகள் வித்தியாசமாக இருப்பதே என்பது அவரது வாதம். இதற்கு தீர்வாக பொதுவான சர்வதேச மொழியொன்றை உருவாக்கினால் என்ன என சிந்தித்தார். அதனடிப்படையில் 16 அடிப்படை இலக்கண விதிகளை வகுத்து இப்புதிய மொழியை உலகுக்கு அறிவித்தார்.

இம்மொழியை வளர்த்தெடுப்பதற்கு ஆரோக்கியமான கருத்துக்களை தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் கூறிவந்தார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்து. பலர் இம்மொழியினால் ஈர்க்கப்பட்டு இதனை கற்கத்தொடங்கினர். அதன் பயணாக 1905ம் ஆண்டு முதலாவது எஸ்பெராண்டோ சர்வதேச காங்கிரஸ் மாநாடு கூடியதன் மூலம் இம்மொழிப்பரம்பல் மேலும் துரிதமானது.

இம்மொழியின் தன்மை :

லத்தீன் மொழிகள், ஆங்கிலம், ஜேர்மன், போலந்து, ரஷிய மொழிகளின் ஆதிகம் எஸ்பெராண்டோவில் நிறைந்துள்ளது. ஆனால் கற்பதற்கு மிக இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக

'கற்றல்' என்பதற்கு எஸ்பெராண்டோவில் சொல் : Lerni,
பாடசாலை என்பதற்கு : Lernejo,
மாணவருக்கு : Lernato
ஆசிரியருக்கு : Lernejestro

ejo : என்றால் 'இடம்'
jestro : என்றால் 'வழிநடத்துபவர்' என பொருள்படுகிறது.

Lerni எனும் சொல்லுடன் இறுதி எழுத்துக்களை மாத்திரம் இவ்வாறு தேவைக்கேற்றால் போல் மாற்றி அமைத்து கொள்கிறார்கள்

இம்மொழியின் குறைபாடு :

இம்மொழிக்கே உரிய சில சிறப்பு எழுத்துக்களுக்கு படிவ முறை இல்லாதது இம்மொழியின் குறைபாடுகளில் ஒன்று. அதாவது,  ĉ ĝ ĥ ĵ ŝ ŭ எனும் எழுத்துக்கள் இம்மொழியில் மாத்திரமே உள்ளன. இவற்றிற்கான எழுத்து படிவம் கைத்தொலைபேசிகளில் கிடையாது. எனினும் எஸ்பெராண்டோ மொழியில் X எனும் எழுத்து இல்லாததால், cx gx hx jx sx ux என இந்த சிறப்பு எழுத்துக்களை எழுதுகிறார்கள்.

மேலும் எந்தவொரு நாட்டினாலும் அரச கருமங்களுக்காக எஸ்பெராண்டோ மொழி அங்கீகரிக்கப்படவில்லை. ஐ.நாவும் இம்மொழியை எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்தியதில்லை. அரச கல்வி பொது பரீட்சைகளிலும் இம்மொழியில் விடையெழுத அனுமதியில்லை.

ஆரோக்கியமான வளர்ச்சி?! :

இன்று சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமடைந்து வரும் இம்மொழி, சமூக வலைத்தளங்களில் சேட்டிங், கைத்தொலைபேசிகளில் எஸ்.எம்.எஸ் என்பவற்றிற்கு இளைஞர்களால் புது யுக்தியாக பயன்படுத்தப்படுகிறது.

எஸ்பெராண்டோ மொழியில் எழுதப்பட்ட இலக்கிய, கவிதை புத்தகங்கள் பல அவற்றின் தனித்துவம் கருதி பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. சில நாட்டு வானொலி அலைவரிசைகளில் எஸ்பெராண்டோ மொழியில் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. எஸ்பெராண்டோ மொழியிலான இசைப்பாடல்களும் பெரும்பாலானோரால் கேட்கப்படுகிறது.

அடிப்படை :

இம்மொழியின் அடிப்படை சொற்கள் சில : mi - நான்,  vi - நீ, li - அவன், ŝi - அவள், ĝi - அது, la - the, jes - ஆம், ne - இல்லை, Bona - வணக்கம்

'உங்களது தாய்மொழிக்கான மாற்று மொழியல்ல இது. நீங்கள் அறிந்துவைத்திருக்க வேண்டிய இரண்டாம் மொழியாக இதை கொண்டுவருவதே எமது நோக்கம்' எனக்கூறும்எஸ்பெராண்டோ மொழி பேசுபவர்களின் பேரவல்,  வேகமாக நிறைவேறத்தொடங்குமாயின் பண்டைய செம்மொழிகளுக்கு கூட ஆபத்து நேரலாம். ஆனால் எஸ்பெராண்டோ மொழிக்காரர்கள் பலர் தங்களது சமூகவாழ்க்கைக்கு இன்னுமொரு மொழியை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்பது தான் தற்போதைய நிலைமை.

உலகில் புதிதாய் உருவாக்கப்பட்ட மொழிகள் வேறு உள்ளனவா?

எஸ்பெராண்டோ மட்டுமல்ல. தனித்துவமான எழுத்து படிவங்களுடன், உலகில் புதிதாய் உருவாக்கப்பட்ட துணை மொழிகள் பத்திற்கு மேல் உள்ளன. எனினும் எஸ்பெராண்டோ மொழியே அவற்றில் முதன்மை பெருக்கிறது. சிறந்த உதாரணமாக விக்கிபீடியா மற்றும் Google Translater களில் Esperanto மொழிப்பிரிவு உள்ளடக்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

Ĉu vi scias pri esperanto? : என்றால் எஸ்பெராண்டோ மொழி பற்றி தெரிந்துள்ளீர்களா? என பொருள்படுகிறது.

இதுவரை இல்லையெனில் இப்போது உறுதியாக கூறலாம் 'jes'.


சிறப்புச் செய்திகள்

May 19, 2013

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,....
May 19, 2013

பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும்...
May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்