About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 24, 2012 / பகுதி: சிறப்புச் செய்தி /

ஒடுக்கப்படும் மக்களுக்காக தனது கலையால் குரல் கொடுக்கும்: Annet Henneman!

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு உண்மை கதையில் எழுதப்பட்ட நாடகம் பெர்லின் நகரத்தில் சென்ற கிழமை பல்லின மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டு செல்வது Annet Henneman அவர்களின் நோக்கம் ஆகும்.அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பல்வேறு சமூகத்தின் உண்மைக் கதைகளும் இவ் நாடகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. Anett Hennman அவர்கள் இன்றைய ஆக்கத்தில் குர்டிஸ்தான் மக்களின் அவல அனுபவங்களை உணர்வு ரீதியாக எடுத்துக்காட்டினார்.

குர்டிஸ்தான் மக்களின் ” எங்களை மறக்கவேண்டாம் ” “Don’t forget us” உண்மைக் கதை நாடக நிகழ்வில் கலந்துகொண்ட ஈழத்தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்ததை உணரக் கூடியதாக இருந்தது.

அத்தோடு நாடக இயக்குனர் Annet Henneman அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிலே சொல்லனா துன்பத்தை அனுபவிக்கும் நிலையை ஆழமாக விளங்கிக் கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இத்துடன் இவ் நிகழ்வுக்கு பெர்லின் பாரதி கலைக் கூடம் தமது அனுசரணையை வழங்கி நாடக இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் தாம் அனுபவித்த துன்பங்களை எடுத்துரைத்ததோடு தாய்நாட்டின் பெருமையை பாடல் ஊடாக எடுத்துக்காட்டினார்கள்.

கலை வியாபாரமயமாக்கப்படும் இவ் உலகில் , தனது கலையால் மனிதவுரிமைக்காக போராடும் Anett Hennman அவர்கள் என்றும் பாராட்டப்பட வேண்டியவர்.

பெர்லின் மக்கள் பிரதிநிதி வித்தியா ஜெயசங்கர் அவர்கள் சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமன் சார்பாக Annet Henneman அவர்களை நேர்காணல் எடுத்திருந்தார்.

Annet Henneman அவர்களின் நிகழ்வு விடையமாக தமிழ்நெட் இணையத்தளத்தில் சிறப்பு செய்திக்குறிப்பு பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்