About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 23, 2012

30ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டியில் புதைந்த தாவரத்திற்கு உயிர் கொடுத்த ரஷ்ய விஞ்ஞானிகள்.

ரஷியாவின் சைபீரியா பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டிக்குள் புதைந்து கிடந்த அரிய வகை தாவரத்திற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் உயிர் தந்துள்ளனர்.

ரஷியாவின் பனிப்பிரதேசமான சைபீரியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'சலேனே ஸ்டெனோ பில்லா' என்ற அரிய வகை தாவரம் இருந்தது.

தற்போது இந்த தாவரங்கள் அழிந்துவிட்டது. இந்நிலையில் சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரையில் ஒரு அணில் இறைக்காக நிலத்தில் தோண்டியபோது 'சலேனேஸ்டெனோபில்லா' குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் விதைகள் கிடைத்தன.

அவற்றை உயிரி-இயற்பியல் துறை விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தாவரம் அழிந்த நிலையில் சைபீரியா பனிக்கட்டிக்குள் 30 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உள்ள பிளா சென்டல் திசுக்களை எடுத்து பரிசோதனை கூடத்தில் வைத்து விஷேசமான சத்துக்கள் நிறைந்த கலவையில் ஊற வைத்தனர். பின்னர் அவற்றை தரமான விதைகளாக மாற்றி மண்ணில் நட்டு பயிரிட்டனர்.

அதிலிருந்து செடிகள் முளைத்து அழகிய மலர்களாக பூத்தன. இதன் மூலம் 30 ஆயிரம் ஆண்டுகள் பனிகட்டிக்குள் உறைந்த கிடந்த தாவரத்துக்கு ரஷிய விஞ்ஞானிகள் குழுவினர் உயிர் கொடுத்து மீண்டும் வளரசெய்து, உலக சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் கூறும்போது, இந்த தாவரம் அதிக அளவிலான சர்க்கரை சத்து உடையது.

இத்தனை ஆண்டுகாலம் பனிக்குள் உறைந்து கிடந்தாலும் அதுதான் இவற்றை உயிர் வாழ செய்துள்ளது என்றும், இந்த பரிசோதனை அழிந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல தாவரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க தூண்டு கோலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்