About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
Banner
வியாழன், பிப்ரவரி 23, 2012 - 15:59 மணி தமிழீழம் |

30ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டியில் புதைந்த தாவரத்திற்கு உயிர் கொடுத்த ரஷ்ய விஞ்ஞானிகள்.

ரஷியாவின் சைபீரியா பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டிக்குள் புதைந்து கிடந்த அரிய வகை தாவரத்திற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் உயிர் தந்துள்ளனர்.

ரஷியாவின் பனிப்பிரதேசமான சைபீரியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'சலேனே ஸ்டெனோ பில்லா' என்ற அரிய வகை தாவரம் இருந்தது.

தற்போது இந்த தாவரங்கள் அழிந்துவிட்டது. இந்நிலையில் சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரையில் ஒரு அணில் இறைக்காக நிலத்தில் தோண்டியபோது 'சலேனேஸ்டெனோபில்லா' குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் விதைகள் கிடைத்தன.

அவற்றை உயிரி-இயற்பியல் துறை விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தாவரம் அழிந்த நிலையில் சைபீரியா பனிக்கட்டிக்குள் 30 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உள்ள பிளா சென்டல் திசுக்களை எடுத்து பரிசோதனை கூடத்தில் வைத்து விஷேசமான சத்துக்கள் நிறைந்த கலவையில் ஊற வைத்தனர். பின்னர் அவற்றை தரமான விதைகளாக மாற்றி மண்ணில் நட்டு பயிரிட்டனர்.

அதிலிருந்து செடிகள் முளைத்து அழகிய மலர்களாக பூத்தன. இதன் மூலம் 30 ஆயிரம் ஆண்டுகள் பனிகட்டிக்குள் உறைந்த கிடந்த தாவரத்துக்கு ரஷிய விஞ்ஞானிகள் குழுவினர் உயிர் கொடுத்து மீண்டும் வளரசெய்து, உலக சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் கூறும்போது, இந்த தாவரம் அதிக அளவிலான சர்க்கரை சத்து உடையது.

இத்தனை ஆண்டுகாலம் பனிக்குள் உறைந்து கிடந்தாலும் அதுதான் இவற்றை உயிர் வாழ செய்துள்ளது என்றும், இந்த பரிசோதனை அழிந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல தாவரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க தூண்டு கோலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Bannerஇலண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற நீதிக்கான போராட்டம்


பிரித்தானியாவில் சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் உருவப்படங்கள் மீண்டும் எரிப்பு


சுமந்திரனின் கொடும்பாவி யாழில் தீக்கிரை!


பல்கலைக்கழக சமூகத்தினரின் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார் - இந்திரகுமார்


தாமதமாகும் ஜ.நா அறிக்கை! புதியதலைமுறைத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி


ஜ.நா விசாரணையை ஒரு உள்ள விசாரணையாக முடக்குவதற்கு தமிழ்த் தரப்பினர் அனுமதிக்கக்கூடாது - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


இன்றைய சூழலில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கடமை - மருத்துவர் எழிலன்


ஜ.நா அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி யாழில் பேரணி! பேரணி குறித்து ஏற்பாட்டாளர் இராஜ்குமாரன் வழங்கும் கருத்துக்கள்

forward

புலத்தில்

புதன், பிப்ரவரி 25, 2015 - 07:55

சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் .
புதன், பிப்ரவரி 25, 2015 - 07:16

இலங்­கையில் இடம்­பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க் குற்ற விசா­ரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்­டிப்­பாக
புதன், பிப்ரவரி 25, 2015 - 06:43

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் விடுதலைச் சுடர்  ஸ்ராஸ்பூர்க் நகரத்தை தொடர்ந்து நேற்றைய தினம் பெல்ஜியம் தலைநகரை நாட்டை வந்தடைந்தது .
புதன், பிப்ரவரி 25, 2015 - 04:45 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் புலம்பெயர் தமிழர்களைப் பற்றியும் அவர்களின் விடுதலைபோராட்ட முன்னெடுப்புகள் பற்றியும் இழிவாகக் கூறியுள்ளமையானது புலத்துத் தமிழர்கள் மத்தியிலும்
புதன், பிப்ரவரி 25, 2015 - 04:18 காணொளி இணைக்கப்பட்டுள்ளது

பெப்ரவரி 24ஆம் நாள் ெசவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து 6.00மணிவரை 24,Grosvenor  Square, WIA 2LQ என்னும் இடத்திலுள்ள அமெரிக்கத்  தூதரகத்தின் முன்னால் நீதிக்கான

மேலும் புலத்தில்...

எம்மவர் நிகழ்வுகள்