About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
Banner
செவ்வாய், பிப்ரவரி 21, 2012 - 15:29 மணி தமிழீழம் |

உலக சினிமாவைத் தரமுயர்த்திய ஜேர்மன் பெண் இயக்குனர், படப்பிடிப்பாளர்! -உமா

படப்பிடிப்பாளர், இயக்குனர், நடிகை, நர்த்தகி என்று பல பாத்திரங்களைத் தனது வாழ்நாளில் தாங்கிய லேனி றீபென்ஸ்ரால் (Leni Riefenstahl) திரைப்பட லரலாற்றின் பிதாமகர்களில் ஒருவராவாh. படப்பிடிப்பு தொடர்பான புரட்சிகர மாற்றங்களைப் புகுத்திய அவர் இன்றைய சினிமா தொழில் நுட்பத்திற்கு அடித்தளம் அமைத்தார்.

இந்த சாதனைப் பெண் 1902ல் பிறந்து 2003ல் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 101. இறுதிக் காலம் வரை படப்பிடிப்பில் ஈடுபட்டார். அமெரிக்காவின் அசோசியேற்றட் பிறெஸ் (AP)அவருடைய இறப்பிற்குப் பிறகு “திரைப்படப் பிடிப்பு நெறியாள்கையில் புதிய பாதையைத் திறந்தவர்” என்று பாராட்டியது.

ஜேர்மன் பத்திரிகைகள் சினிமாவைப் புதிய தளத்திற்கு இட்டுச் சென்றவர் என்று வாழ்த்தின. ஜக்கிய இராச்சியத்தின் பீபீசி(BBC) ஒரு படி மேலே சென்று அவர் சினிமாத் துறையில் புகுத்திய மாற்றங்களைப் பட்டியலிட்டது.

கிறேன் (Crane)எனப்படும் பாரம் தூக்கியில் கமராவையும் இருக்கையையும் பொருத்தி உயரத்தில் இருந்து படம் பிடிக்கும் முறையை அறிமுகம் செய்தார். இன்று இது மிகவும் பரவலாக நடக்கும் செய்முறை. நெடிய இருப்புப் பாதையில் (Tracking Rails) சக்கர நாற்காலியையும் கமராவையும் பொருத்தி ஒட்டப்பந்தயம, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை வேகமாக நகர்ந்து பக்கவாட்டகப் படம் பிடித்தார்.

குதிரைப் பந்தையங்கள், ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றைப் படம் பிடிப்பதற்கு இது மிகவும் சிறந்த முறையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பல கமராக்களை ஒரே நேரத்தில் இயக்கி காட்சிகளுக்கு முழு வடிவம் கொடுக்கும் தொழில்நுட்பத்தின் தாயாகவும் லேனி றீபென்ஸ்ரால் மதிக்கப் படுகிறார்.

அவருக்குரிய மதிப்பும் மரியாதையும் கூடுதலாகக் கிடைக்காததற்கு அவர் சர்வாதிகாரி ஆடொல்ப் ஹிற்லருடன் கொண்டிருந்த நட்பும் நெருக்கமும் காரணமாகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் அவர் வெற்றி பெற்ற நேச நாட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் விசாரணையின்றி விடுதலை செய்யப்பட்டார்.

ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான பட இயக்குநர் என்ற புகழ் அவருக்கு எதிரியாக முடிந்தது. அவர் படப்பிடிப்பில் ஆற்றிய சாதனைகள் ஏராளம. நியூரன்பேர்க் (Nuremberg) நகரில் நடந்த ஹிற்லரின் நாசிக்கட்சி (Nazi) மாநாட்டை லேனி றீபென்ஸ்ரால் 1934ம் ஆண்டு படம் பிடித்தார்.

படத்தின் ஆங்கிலப் பெயர் (The Triumph of the Will) தமிழில் திடசங்கற்பத்தின் வெற்றி என்று பொருள் கொள்ளலாம். அரசியல் பிரசாரப் படங்களுக்கு இலக்கணம் வகுத்ததாக இந்தப்படம் பற்றிக் கூறப்படுகிறது. ஜேர்மனி உலக வல்லரசாக மீண்டும் உயரும் என்ற செய்தியை இந்த படம் சிறப்பித்துக் கூறுகிறது. நாசித் தலைவரையும் அவருடைய சகாக்களையும் படப்பிடிப்பு மூலம் லேனி றீபன்ஸ்ரால் தூக்கிக் காட்டினார்.

பிற்காலத்தில் அவர் சூடான் நாட்டு நூபா (NuBa)பழங்குடியினரைப் புகைப்படம் பிடித்து நூல்களில் பிரசுரித்தார். இதன் மூலம் அவர்களுடைய பண்பாட்டுத் தரவுகளை உலகம் அறிந்தது. அவர் நீர் வாழ் உயிரினங்களையும் படம் பிடித்தார். 2002ம் ஆண்டில் அவர் கடலடியில் பிடிக்கப்பட்ட(Impressions Under the Water) என்ற ஆவணப் படத்தை வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 100.

ஜேர்மன் திரைப்படங்கள் இன்று மிகவும் தரமானவையாக இருந்தாலும் உலக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையவில்லை. ஜேர்மன் தலைநகர் பேர்ளினில் (Berlin) சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. உலகின் சிறந்த திரைப்படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. அதில் பரிசுகள் பெறுவதைப் பெரும் கவுரவ அந்தஸ்தாகப் படத் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இன்று திரைப்படத் தொழில்நுட்பம் கணினி மயப்படுத்தப் பட்டுள்ளதால் பலவிதமான மாயாஜாலங்களைக் காண்கிறோம். கிராபிக்ஸ்(Graphics) எனப்படும் வரைகலை, அனிமெஷன்(Animation) எனப்படும் சித்திரங்களுக்கு உயிரூட்டமும் அசைவும் கொடுக்கும் முறை என்பன வந்துள்ளன.

புளோ அப் (Blow -up ) என்ற சிறிய உருவங்களைப் படமாக்கிய பிறகு அவற்றைப் பெரிதாக்கித் திரையில் காட்சிப் படுத்தும் முறையும் அறிமுகமாகியுள்ளது. படுவேகமாக வாகனங்கள் ஒன்றையொன்று துரத்தும் காட்சிகள் இந்த முறையில் படம் பிடிக்கப்படுகின்றன. நீரடிப் படப்பிடிப்பும் இதே முறையில் படமாக்கப்படுகிறது.

ஒன்றை மாத்திரம் நினைவில் இருத்த வேண்டும.லேனி றீபென்ஸ்ரால் எடுத்த படங்கள் அனைத்தும் தத்ரூபமானவை. அவர் இன்றைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தவில்லை. ஆனால் அவற்றிற்கு வித்திட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் கணினி யுகத்தை எப்படித் திரைப்படத் துறைக்குப் பயன்படுத்தியிருப்பார் என்பதைக் கற்பனை பண்ண முடியவில்லை.


Banner



கத்தி திரைப்பட விவகாரம் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் பெயர் நீக்கம்! கடித மூலம் உறுதி செய்கிறார் கருணாமூர்த்தி!


தமிழ் மக்களை பலவீனப்படுத்துகின்ற இன விகிதாசார முறையை மாற்றி அமைக்கின்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது - மாவை


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியம் - சட்டத்தரணி தமரா புறுமா


தமிழின விரோதி சுப்பிரமணியன் சுவாமியின் வீடு முற்றுகைப் போராட்டத்தில் 300 பேர் கைது!


கத்தி திரைப்படத்தை திரையிட வேண்டாம் திரைப்பட உரிமையாளர்களிடம் வேண்டுகோள்! தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு


இலங்கைப் போர்குற்றம் விசாரணை தொடர்பாக திரு.கிருபானந்தன் அவர்கள் வழங்கும் கருத்துக்கள்


இலங்கைப் போர்குற்றம் விசாரணை தொடர்பாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து சிவலோகநாதன் அவர்கள் வழங்கும் கருத்துக்கள்


நோர்வே தமிழ்முரசம் வானொலியில் இடம்பெற்ற சமகால அரசியல் சந்திப்பு

forward

புலத்தில்

ஞாயிறு, அக்டோபர் 12, 2014 - 18:57 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

இதில் தமிழீழ விடுதலை போரில் களப்பலியான முதல் பெண் போராளி 2ஆம் லெப்டினன்  மாலதியின் 27 ஆம் ஆண்டு நினைவாக தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு நடை பெற்றது.
புதன், அக்டோபர் 1, 2014 - 04:48 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான நெய்சி லூ குரோன் தமிழ்ச்சோலையின் 16 வது ஆண்டு விழா 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நியுலிசூர்மாறன் என்னும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக
திங்கள், செப்டம்பர் 29, 2014 - 21:20 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

27.09.2014 யேர்மன் முன்சன் நகரில் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் மற்றும் கேணல் ராயு அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு இடம்பெற்றது.  நிகழ்வுகள் உரிய நேரத்துக்கு ஆரம்பமானது. முதல் நிகழ்வாக
திங்கள், செப்டம்பர் 29, 2014 - 16:01 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல்
ஞாயிறு, செப்டம்பர் 28, 2014 - 22:25 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

27.09.2014 நேற்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரை தமிழ் இளையோர் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்

மேலும் புலத்தில்...

எம்மவர் நிகழ்வுகள்