About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 16, 2012

அதிசயம் ஆனால் உண்மை... வெள்ளை கன்று ஈன்ற எருமை!

கேரளாவில் விவசாயி ஒருவரின் எருமை மாடு கடந்த 10ம் தேதி வெள்ளைக் கன்று ஈன்றுள்ளது. இந்த அதிசயக் கன்றை வளர்க்கத் தேவையான உதவியை செய்யஅம்மாநில அரசு முன்வந்துள்ளது.


கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட அஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஷர்புதீன். அவர் கடந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள மாட்டு சந்தையில் பால் பண்ணை வைப்பதற்காக எருமை மாடுகளும், பசு மாடுகளும் வாங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சந்தையில் வாங்கிய ஒரு எருமை மாடு கடந்த 10ம் தேதி மதியம் ஒரு கன்றுகுட்டியை ஈன்றது.

கன்று குட்டியை கண்ட அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். காரணம் அக்கன்றுக் குட்டி வெள்ளை நிறத்தில் இருந்தது தான். இது குறித்து அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவே அப்பகுதியே திரண்டு வந்து கன்றுக்குட்டியை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த அதிசய கன்றுக்குட்டி குறித்து அப்பகுதியினர் கூறும்போது 1930ம் ஆண்டிலும், 1950ம் ஆண்டிலும் வெளிநாட்டில் மட்டுமே இது போன்று கன்றுக்குட்டி பிறந்ததாகவும் இந்தியாவில் இதுதான் முதல் முறை என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

இது குறிதது தகவல் அறிந்த கேரள அரசு இக்குட்டியை வளர்க்க உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த அதிசய கன்றுக்குட்டிக்கு உரிமையாளர் அல்பீனா என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த கன்றுக்குட்டியை ரூ.3லட்சம் வரை கொடுத்து விலைக்கு வாங்க பலர் ஷர்புதீனை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை....
May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்