About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 8, 2012 / பகுதி: செய்தி /

விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு விடுதலை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 4-2-2012 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.   இன்று (7-2-2012) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிணை கோரி மனு செய்யப்பட்டது.  பிற்பகல் 4 மணியளவில் பிணையளிக்கப்பட்டது. பிணையாணையைப் பெற்றுக்கொண்டு புழல் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, வன்னிஅரசை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறை தயாரானது.  ஆனால் அதற்குள் சிறை அதிகாரிகளிடம் பிணை ஆணை வழங்கப்பட்டதன்பேரில் வன்னிஅரசு விடுவிக்கப்பட்டார்.

மாநில நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், மாலதி, கடலூர் மாவட்ட நிர்வாகி தாமரைச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ப. பூவிழி, சாமுவேல், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச்செல்வன், சாரநாத், இர.செந்தில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, தமிழ்ச்செல்வன், தாஸ் மற்றும் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் சிறை வாயிலில் வன்னிஅரசுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்