ஆனால் எமது உறவுகள் இரு நகரங்களிலும் குறைவான எண்ணிக்கையில் கூடியிருந்தாலும் உணர்வுரீதியாக பல மணி நேரங்கள் பலத்த குளிரிலும் பனி மழையிலும் தமது கண்டனத்தை முன்னெடுத்தார்கள் .இலங்கை தூதரகம் தமது கொண்டாட்டதிற்கு பல யேர்மனிய அரச அதிகாரிகளுக்கு அழைப்புதல் அனுப்பியிருந்தாலும் , அவர்கள் அங்கு சமூகம் தரவில்லை .யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் முற்கூட்டியே பல அரசியல் கட்சிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் ஊடகங்களுக்கும் இது விடையமாக கடிதங்கள் அனுப்பப் பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .அத்தோடு கவனயீர்ப்பு நிகழ்விலும் யேர்மனிய மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் , இலங்கையில் கொலைக்களம் காணொளி யேர்மன் மொழியிலும் வழங்கப்பட்டது .
புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.
நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை தொடர்ந்தும் கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக் எடுத்துச் சொல்வோம் நாம் ஒவ்வொரு தமிழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . “விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது.”
எம் இனத்தை முழுமையாகத்துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது.
தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது.
தகவல் : யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை