About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 5, 2012 / பகுதி: மருத்துவம் /

மலேரியா நோயானது முன்னர் நம்பப்பட்டதை விட இரு மடங்கான ஆட்களை கொல்கிறது..!

மலேரியா நோயானது முன்னர் நம்பப்பட்டதை விட இரு மடங்கான ஆட்களை கொல்கிறது என்று மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில் பிரசுரமான புதிய ஆய்வு பற்றிய தகவல் ஒன்று கூறுகிறது.பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் நிதியத்தின் நிதி அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்டதாகும்.2010 ஆம் ஆண்டில் மலேரியாவால் 12 லட்சம் மக்கள் இறந்துள்ளதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டைவிட இந்த எண்ணிக்கை இருமடங்காகும்.

மேலும் சிக்கலான கணினி மாதிரிகளை கொண்டும், வேறு நோய்களால் இறந்தவர்கள் என்று முன்பு கருதப்பட்டு, ஆனால் பின்னர் அவர்கள் மலேரியாவால்தான் இறந்தார்கள் என்று அறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை கொண்டும் கணிக்கப்பட்ட புதிய தரவுகளின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.2010 ஆம் ஆண்டு நாம் நினைத்ததை விட மோசமானதாக இருந்தாலும், அது முன்னர் இருந்த நிலைமைகளை விட பரவாயில்லை.

இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட எண்ணிக்கைகளைக் கொண்டு பார்க்கும் போது 2004 ல் 18 லட்சம் பேர் மலேரியாவால் இறந்திருக்கிறார்கள். அதன் பின்னர் எண்ணிக்கை குறைந்ததற்கு சர்வதேச கொடையாளிகளின் உதவியுடன் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட மலேரியா கட்டுப்பாட்டு திட்டங்களே காரணமாகும்.

எப்படியிருந்த போதிலும் இந்த விடயங்களில் முன்னேற்றம் இருந்திருக்கிறது என்று லான்செட் ஆசிரியரான றிச்சர்ட் ஹோர்ட்டன் கூறுகிறார்.

மலேரியாவவை கட்டுப்படுத்தாலாம். ஆனால் அதனை ஒழிக்க முடியாது. நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் கூட, 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மலேரியாவால் ஒரு ஆண்டில் இறக்கும் ஆட்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்தை விடக் குறைக்க முடியாது.


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்