About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 3, 2012 / பகுதி: உலக வலம் /

தாலிபன்களிடம் இன்னும் உத்வேகம் குறையவில்லை..!

பிபிசியால் வெளிக்கொண்டுவரப்பட்ட நேட்டோவின் அறிக்கையொன்று, ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரை தாலிபான்களின் பார்வையில் ஆராய்ந்துள்ளது.

 

 

பத்தாண்டுகளாக இந்தப் போர் நடைபெற்றுவந்தாலும் அவர்களிடம் உத்வேகம் எந்தவகையிலும் குறையவில்லை என்றும் அவர்களுக்கான நிதி வருமானங்கள் சிறப்பாக உள்ளன என்றும் சரணடைவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்றும் இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருகிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.

ஆனால் காபூலுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

எனினும் தாலிபான்களின் சிந்தனைகள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பது தொடர்பில் இதுவரை வந்த அறிக்கைகளிலேயே இதுதான் முழுமையானது என்றும் கூறப்படுகிறது.

27,000 பேரிடம் நடைபெற்ற விசாரணைகளுக்கு பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எந்தெந்தப் பகுதிகளில் தாலிபன் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகிறது என்பதும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய ஆப்கன் அரசில் நிலவும் ஊழல் குறித்து மிகவும் வேதனையும் விரக்தியும் அடைந்துள்ள சராசரி ஆப்கான் மக்கள் தாலிபான்களை நோக்கி நெருக்கமாக நகருகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நேட்டோவின் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தனிலிருந்து வெளியேற ஆரம்பிக்கும் நடவடிக்கை இப்போது தொடங்கியுளது. 2014 ஆம் ஆண்டில் படையினர் அங்கிருந்து முற்றாக விலக்கிக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்