About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 31, 2012 / பகுதி: உலக வலம் /

ஈரான், வட கொரிய நிலக்கீழ் இலக்குகளைத் தாக்கும் நோக்கில் குண்டுகளை மேம்படுத்தவுள்ள அமெரிக்கா?

ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் இயக்கி வரும் இரகசிய நிலக்கீழ் அணு ஆயுத உலைகளை அழிக்கவென அமெரிக்கா தயாரித்து வைத்துள்ள அதன் மிகப்பெரிய குண்டானது போதுமான சக்தி கொண்டதல்லவென பென்டகன் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இக் குண்டினை இன்னும் மேம்படுத்தும் பொருட்டு தமக்கு அனுமதியளிக்குமாறு அமெரிக்க அரசிடம் பென்டகன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலத்தின் கீழ் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட (Bunker Buster) குண்டுகளில் தற்போது அமெரிக்காவிடம் உள்ள அதி செயற்றிறன் வாய்ந்தவையே (Massive Ordnance Penetrator) குண்டுகளாகும். அவை 13.6 தொன் நிறை கொண்டவை.

குறிப்பாக ஈரான் மற்றும் வட கொரியாவின் இரகசிய இலக்குகளைத் தாக்குவதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்டவை.

இந்நிலையில் ஈரான் தனது அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளை அதி பாதுகாப்பான சுரங்கங்களில் மேற்கொண்டு வருவதாகவும், முன்னரை விட அவற்றின் பாதுக்காப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

அவ்வாறதொரு நிலையிலேயே பென்டகன் இத்தகையதொரு வேண்டுகோளை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிகின்றது.

இதுவரை இத்தகைய குண்டுகள் 20 தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்குண்டுகளை மேம்படுத்துவதற்காக இன்னும் 82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியினை பென்டகன் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்