
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதையைக் கடக்க முற்பட்ட ஒருவருடன் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியபோதே இந்த விபத்துச் சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அதில் பயணித்த சிறுமி உட்பட ஐந்து பேர்படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாகக் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.